என் மகன் முன் சிறிய உடையில் தான் இருப்பேன்.. அதற்குக் காரணம் இதுதான்.. பரீனா ஆசாத்!
சென்னை: சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகையும் தொகுப்பாளருமான பரீனா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆண் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்த போதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசிய பரீனா, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சரியான மதிப்புகளையும் பெண்களை மதிக்கும் பண்பையும் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றார். என் மகன் முன்பு நான் சிறுஉடைகளைத் தான் அணிவேன், அவன் என்னை பல்வேறு உடைகளில் பார்த்து வளர்கிறான். அதனால் எதிர்காலத்தில் வெளியே ஒரு பெண் அதே மாதிரியான உடை அணிந்து இருந்தாலும், அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வராது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும், அவர்களை ஒரு மனிதராக பார்க்க வேண்டும் என்பதையும் சிறு வயதிலேயே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

ஃபரீனா ஆசாத்: மேலும், பெண்கள் அணியும் உடைகளை காரணம் காட்டி அவர்களை குறை கூறுவதை விட, ஆண் குழந்தைகளின் மனநிலையை சரியான பாதையில் வளர்ப்பதே முக்கியம். குடும்பத்தில் இருந்து கிடைக்கும் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் மதிப்பீடுகளே குழந்தைகளின் எதிர்கால நடத்தையை தீர்மானிக்கும். பெண்கள் பாதுகாப்பாக வாழும் சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில், பெண் குழந்தைகளை மட்டும் பாதுகாப்பாக இருக்க சொல்லுவது சரியானது இல்லை. ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும் என்று பரீனா ஆசாத் பேசி இருந்தார். இவரின் பேச்சு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் குழந்தைகள் முன் சிறிய உடை அணிவது எல்லாம் சரியில்லை என எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா: தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பரீனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். அதன் பிறகு விஜய் டிவியின் பிரபலமான சீரியலான "பாரதி கண்ணம்மா"வில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல சின்னத்திரை தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் அவர், சமூக பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications