For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மேடிட்ட வயிற்றுடன்.. ஒற்றைக் காலைத் தூக்கி.. ஸ்டைலாக ரீல்ஸ் போட்ட பரீனா

  |

  சென்னை : கர்ப்ப காலத்துல குனிஞ்சி நிமிர முடியாதுல்ல.. அதான் இப்படி என்று அசால்டாக வீடியோ போட்டு அசத்தியுள்ளார் பரீனா.

  Bharathi kannamma சீரியலிருந்து விலகுகிறாரா Venba | Farina Pregnant

  கம்மலை காதில் மாட்டும்போது அது கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க ஸ்டைலாக காலைத் தூக்கி எடுத்து வீடியோ போட்டுள்ளார் பரீனா.

  இந்த வழியும் ஈசியா தானே இருக்கு இனி நாங்களும் பின்பற்றுவோம் என ரசிகர்களும் குறும்புத்தனமாக கலாய்த்து வருகின்றனர்.

  மெத்தையில் மல்லாக்க படுத்தபடி போட்டோ.. திட்டிய ரசிகர்.. மெத்தையில் மல்லாக்க படுத்தபடி போட்டோ.. திட்டிய ரசிகர்..

  போட்டோவில் நல்ல செய்தி

  போட்டோவில் நல்ல செய்தி

  தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து 7 மாதம் கடந்த பிறகு மேடிட்ட வயிற்றோடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து நேற்று வீடியோ போட்டிருந்தார் பாரதி கண்ணம்மா வெண்பா புகழ் பரீனா. தற்போது சமூக வலைத்தளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் பரீனா தற்போது லேட்டஸ்டாக இன்னொரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் .அதை பார்த்ததும் வாவ் என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர் .

  ஏற்கனவே பாப்புலர்

  ஏற்கனவே பாப்புலர்

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தான் தற்போது டாப் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அந்த சீரியலை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததற்கு வெண்பா என்னும் கேரக்டரும் ஒரு காரணம்தான் என்பதே யாராலும் மறுக்க முடியாது. அந்த வெண்பா கேரக்டரில் நடித்து வரும் பரீனாவை ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் .ஆனால் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு தெரிந்த முகம் வேறு இந்த சீரியலில் காட்டும் முகம் வேறு.

  காத்திருக்கும் ரசிகர்கள்

  காத்திருக்கும் ரசிகர்கள்

  பரீனா இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னரே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்திருந்தார். இவர் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது இவருடைய தமிழ் உச்சரிப்பை பார்ப்பதற்காகவும் இவருடைய உடையின் நேர்த்தியையும் அதற்கு மேட்சாக போடும் ஜுவல்ஸ்களை பார்ப்பதற்காகவும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.

  பார்த்தாலே பயந்து ஓட்டம்

  பார்த்தாலே பயந்து ஓட்டம்

  துடுதுடுப்பான கேரக்டரால் எல்லோரிடமும் சீக்கிரத்தில் மிங்கிள் ஆகி விடுவது இவருடைய சிறப்பு தான் .ஆனாலும் இவருக்கு எதிரில் யார் கேள்வி கேட்டாலும் அவருடைய வாயை அடைப்பதில் இவர் வல்லவர். அப்படி ரு செல்லமான வாயாடியும் கூட .அதனாலேயே பலரும் இவரிடம் பேச கொஞ்சம் தயங்குவார்கள் .அப்படி ஒதுங்கி போனாலும் இவர் விடாமல் அவர்களை ஒரு பாடு படுத்தி விடுவார்.

  நான்கு வருட கனவு

  நான்கு வருட கனவு

  இவருக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதே பல ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் இன்ப அதிர்ச்சியான போட்டோவை நேற்று வெளியிட்டிருந்தார் .அதை பார்த்ததும் இது போட்டோஷூட் ஆக இருக்குமோ என்று சிலர் குழம்பி வந்தாலும் அதெல்லாம் இல்லை நாலு வருஷத்து கனவு இப்போதான் நிறைவேறுது என்று கேப்ஷன் போட்டு தாயாகப் போகும் நல்ல செய்தியைச் சொல்லி இருந்தார்.

  காலைத்தூக்கி கலக்கல்

  காலைத்தூக்கி கலக்கல்

  இந்த நிலையில் இன்று கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் திடீரென ஒரு பொருள் கீழே விழுந்து விட்டால் குனிந்து எடுக்க முடியாது. அப்படி நேராக குனிந்தால் குழந்தைக்கும் கஷ்டம் .அதனால் இப்படி எடுக்கலாம் என காலைத்தூக்கி கீழே விழுந்த கம்மலை ஸ்டைலாக எடுத்துக் காட்டியிருக்கிறார் .இவருடைய இந்த வீடியோவை பார்த்ததும் ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு ஹார்ட்டின்களை கமெண்டுகளாக அனுப்பி விடுகின்றனர் . அதுமட்டுமில்லாமல் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று இவருக்கு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அள்ளி தெளிக்கின்றனர்.

  English summary
  Bharathi Kannamma fame Actress Farina Azad announces pregnancy with a cute post and shared her excitement with fans on social media. She Shared a picture of hers with the baby bump, and wrote, “Yes WE ARE PREGNANT".
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X