சீறும் அலைகளுக்கு நடுவே சக்கர ஆசனம்.. சர்வதேச யோகா தினத்தில் கடற்கரையைச் சூடேற்றிய ஃபரீனா ஆசாத்!
சென்னை: உலக அளவில் யோகாசனத்தின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி 'சர்வதேச யோகா தினம்' உலகெங்கும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நாடே யோகா தினத்தைக் கொண்டாடிய வகையில், சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் வில்லி நடிகையான ஃபரீனா ஆசாத் கடற்கரையில் யோகாசனம் செய்து இன்ஸ்டாகிராமையும் அதிர வைத்துள்ளார்.
ஃபரீனா ஆசாத்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் அறிமுகமாகி , அதன் பிறகு படிப்படியாக சீரியலில் எண்ட்ரி கொடுத்தவர் தான் ஃபரீனா. பலருக்கும் இவரை வெண்பா என்று சொன்னால் தான் தெரியும். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் தூக்கத்தைக் கெடுத்தார் ஃபரீனா. அந்த சீரியலுக்கு பின் பல சீரியல்களில் நடித்தாலும்,அந்த வெண்பா ரோல் போல எதுவும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சக்கர ஆசனம்: எப்போதும தனது ரசிகர்களுடன் நெருக்கமாகவே இருக்கும் ஃபரீனா, யோகா தினத்தை முன்னிட்டு பல கடுமையான யோகாசனம் செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். நேற்று காலை சூரியன் உதிக்கும் வேளையில், சீறிப்பாயும் அலைகளுக்கு நடுவே கடற்கரை மணலில் அவர் செய்துள்ள கடினமான யோகாசனப் புகைப்படங்கள் தற்போது செம ட்ரெண்டாகி வருகின்றன. கடற்கரை அலைகளுக்கு நடுவே வில்போல உடம்பை வளைத்து 'சக்கர ஆசனம்' செய்து மிரட்டியுள்ளார். மேலும், சூரிய உதயத்தை நோக்கி கைகூப்பி தியானம் செய்யும் அமைதியான போஸையும் பகிர்ந்துள்ளார்.
ஃபிட்னஸ் போஸ்: அலைகள் அமைதியுடன் சங்கமிக்கும் இடத்தில் என்னையே நான் கண்டடைகிறேன். இந்த சர்வதேச யோகா தினத்தில் சமநிலை, வலிமை மற்றும் அமைதியைக் கொண்டாடுகிறேன் என்ற கேப்ஷனுடன் விதவிதமான போட்டோக்களை ஃபரீனா ஷேர் செய்து இருக்கிறார். இந்த ஃபிட்னஸ் மற்றும் கிளாமர் கலந்த யோகா போஸ்ட்டுகளுக்கு நெட்டிசன்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர். குழந்தை பிறந்த பிறகும் தனது உடலை கட்டுக்கோப்பாக ஃபரீனா ஆசாத் வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications