கன்னக்குழியைக் காட்டி.. அழகான ராட்சசி.. படுத்தி எடுக்கும் பரீனா!

சென்னை: கன்னக்குழி அழகை காட்டி சூடேற்றும் அழகான ராட்சசி பரீனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கொஞ்சி தீர்க்கிறார்கள் ரசிகர்கள்.

இதுவரைக்கும் இவர் போஸ்ட் பண்ணின போட்டோக்களை விடவும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

பரினா ஆசாத் பாரதிகண்ணம்மா சீரியல் அழகான வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலை பார்த்து பல சீரியல் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் .

அதிகரிக்கும் வில்லத்தனம்

அதிகரிக்கும் வில்லத்தனம்

ஆனாலும் அதை எல்லாம் கவலைப்படாமல் வில்லத்தனத்தால் நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கி வருகிறார் . பொதுவாக கதாநாயகிகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் இவரைப் பொருத்தவரையில் வில்லிக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

புல்லரிக்க வைக்கும் உச்சரிப்பு

புல்லரிக்க வைக்கும் உச்சரிப்பு

இந்த சீரியலில் இவர் டாக்டராக நடித்திருந்தாலும் ஒரு பேஷன் டிசைனர் போல உடை அலங்காரங்களும் அழகான தமிழ் உச்சரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார் . பலர் இவர் விதவிதமாக போடும் ஆடைகளை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை பார்க்கின்றனர். அதுவுமில்லாமல் இவர் டிரஸ்சுக்கு மேட்ச்சாக போடும் ஜூவல்ஸ்களும் வேற லெவல் இருப்பதால் இதனை பற்றிய பல பெண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

செம வில்லத்தனம்

செம வில்லத்தனம்

அதனால்தான் இவர் செய்யும் வில்லத்தனத்தை கூட மன்னித்து விடுகிறார்கள். இவர் இந்த சீரியலில் நடிகையாக மட்டுமல்லாமல் பேஷன் டிசைனர் ஆகவும் இருந்து வருகிறார் .அது மட்டுமல்லாமல் சில சீரியல்களுக்கும் பேஷன் டிசைனராக இருக்கிறார். இருக்கும் பொருட்களை அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக பிய்த்து வைத்து புது டிசைனாக மாற்றி விடுவதில் கைதேர்ந்தவர் .

அழகிய தொகுப்பாளினி

அழகிய தொகுப்பாளினி

இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி தன்னுடைய திருத்தமான தமிழ் பேச்சால் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் .அதன் பிறகு இவருக்கு சில சீரியல்களில் இருந்து வாய்ப்பு வந்தாலும் இவர் முதலில் கொஞ்சம் பயந்து இருக்கிறார். என்னதான் இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வரவே அதில் ஒரு கை பார்த்து விடலாம் என்றுதான் சீரியலில் காலடி எடுத்து இருக்கிறார்.

கண்ணம்மாவின் வில்லி

கண்ணம்மாவின் வில்லி

அதுவும் இந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக இவர் வேற லெவல் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் திடீரென்று பாப்புலர் ஆனாலும் தற்போது வரைக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னுக்கு வந்து கொண்டிருப்பதில் இவரது பங்கும் இருக்கிறது. ஆனால் முட்டைக் கண்ணை உருட்டி கண்ணம்மாவிடம் அடிக்கடி பல்பு வாங்கினாலும் மிரட்டி நடிக்கும் வில்லன்களை விடவும் சிரிச்சுகிட்டே நடிக்கிற இந்த வில்லியை தான் பலருக்கும் பிடித்திருக்கிறது.

துறுதுறுப்பு

துறுதுறுப்பு

அதுவுமில்லாமல் உண்மையிலேயே ஆக்டிவ் ஆகவும் துடிப்பாகவும் இருக்கும் இவருக்கு கதாநாயகியாக நடித்து அழுது கொண்டே இருப்பது கொஞ்சம்கூட பிடிக்காதாம். அதனால்தான் வில்லியாக இருந்து அனைவரையும் பாடாய் படுத்தி ஒரு கை பார்த்து விடலாம் என்று இந்த லைனை செலக்ட் பண்ணி இருக்கிறார். ஆனாலும் அதிலேயும் தனது தனித்திறமையை நிரூபிக்க வேண்டும் என்றுதான் இவர் அழகால் ரசிகர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்.

கொலை வெறி நடிப்பு

கொலை வெறி நடிப்பு

சீரியலில் மட்டும் தான் நாங்கள் கொலைவெறி யாக நடிச்சுக்கிட்டு இருப்போம் ஆனால் சூட்டிங் டைமில் செம ஜாலியாக ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்துக் கொண்டு இருப்போம் என்று இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளையும் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார். ஆனால் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலர் கண்ணிமைக்க மறந்தது ரசித்து வருகிறார்கள்.

கன்னக்குழியில் விழுந்து!

கன்னக்குழியில் விழுந்து!

இதுவரைக்கும் இவரை சீரியலில் பார்த்து திட்டி தீர்த்தவர்கள் கூட தற்போது இவர் சாந்த சொரூபியாக அழகின் பதுமையாக கண்ணக்குழி சிரிப்பால் ரசிகர்களை பாடாய் படுத்தி எடுக்கிறாராம் .இவரைப் பார்த்து பலர் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .எப்போதுமே இவரை கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள் கூட தற்போது கலாய்க்க மறந்து ரசித்து அவர்களுடைய ஹார்ட்டின் களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X