அவங்க திரும்ப வந்தாலும் எனக்கு வேண்டாம்.. நள்ளிரவில் அழுது புலம்பிய ஃபரீனா ஆசாத்!

சென்னை: தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரீனா ஆசாத், இன்ஸ்டாகிராமில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியோடு வலம் வருபவர். ஆனால், நேற்று இரவு முதல் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ச்சியாக சோகமான முகத்துடன், மனமுடைந்து பேசிய வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் "என்னாச்சு ஃபரீனா? ஏன் இப்படி பேசுறீங்க? எனப் பதற்றத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஃபரீனா ஆசாத்: நேற்று இரவு ஃபரீனா வெளியிட்ட ஒரு வீடியோவில், இப்போ நீங்க ஒருத்தர் கிட்ட பேசணும்னு தோணினாலும், இல்ல பேசினாலும் அது உங்களுக்கு அமைதியையோ அல்லது ஒரு சௌகரியத்தையோ கொடுக்குதா என்று கேட்டால்.. இல்லை. நீங்கள் எமோஷனலாக உடைந்து போகிறீர்கள், உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். ஒருவித குழப்பத்தில் இருக்கிறீர்கள், இல்லையா? உங்களுக்கு இதனால் எந்த அமைதியும் கிடைக்கப்போவதில்லை என்றால், தயவுசெய்து அவரிடம் பேசாதீங்க, ஒருவரை 'மிஸ் செய்கிறோம்' என்பது வெறும் உணர்வுதான். அதற்காக அவரிடம் பேச வேண்டும் என்ற அவசியமில்லை. நம் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

Farina Azad instagram
Photo Credit:

திரும்பி வந்தாலும் வேண்டாம்: நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத ஒரு விஷயத்தின் மீது இதற்கு மேலும் நம்பிக்கையோடு இருக்காதீங்க, ஒருவேளை அவர் உங்களிடம் திரும்ப வந்து, உன் மீது இன்னும் அக்கறை இருக்கிறது என்று ஆறுதல் கூறினாலும், அந்த ஆறுதல் உங்களுக்கு இப்போது தேவையில்லை. அந்த உணர்வுகள் அப்படியே இருக்கட்டும், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் மன வலியை பகிரும் விதமாகப் பேசி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஃபரீனாவிற்கு நினைத்துக்கொண்டு இந்த நிலையில், காலையில் மற்றொரு உருக்கமான வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

தைரியமா இருங்க: அதில், நீங்க ஒரு ஹார்ட் பிரேக்ல இருக்கும்போது, உங்க பிரண்டுக்கு கால் பண்ணி, உங்களை மீட் பண்ணனும், உங்ககிட்ட பேசணும்னு சொன்னா.. அவங்களால வர முடியல, அவங்க பிஸியா இருக்காங்கன்னா அது அவங்க தப்பா? கண்டிப்பா அவங்க தப்பு இல்ல, அது உங்க தப்பு தான். அவங்ககிட்ட இருந்து எதையாவது எதிர்பார்க்கிறது நீங்க செய்கிற பெரிய தப்பு. அவங்க பிஸியா இருக்காங்கன்றது அவங்க தப்பு இல்லையே, இந்த உலகத்திலேயே உங்க கூடவே இருக்கப் போற, உங்களைப் பத்தி அக்கறைப்படுற ஒரே ஒரு பெஸ்ட் பிரண்ட் யார் தெரியுமா? அது நீங்க மட்டும்தான். உங்க லைஃப்ல உங்களுக்கு என்ன நடந்தாலும் அதை நீங்க உங்ககிட்டயே சொல்லுங்க. உங்க மனசுல இருக்குற கஷ்டத்தை உங்ககிட்டயே சொல்லி, அதை ஒரு பேப்பர்ல எழுதி நீங்களே படிச்சுப் பாருங்க... உங்க மனசு ரொம்ப லேசாகும் நம்புங்க என வீடியோவில் கண்கலங்கியபடி பேசி இருக்கிறார். எப்போதும், ஜாலியாக பேசும் ஃபரீனா ஆசாத்தின் இந்தத் தொடர் வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்ன தனிப்பட்ட பிரச்சனை நேர்ந்தது என்று தெரியாமல் குழம்பி உள்ளனர்.' இருந்தாலும் யாரையும் நம்பாதீர்கள் ஃபரீனா, நீங்கள் தைரியமான பெண், எதுவாக இருந்தாலும் மீண்டு வாங்க என்றும் அவருக்கு ஆதரவாகக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X