TVKக்கு ஓட்டு போட்டா தற்குறியா? பிறக்கும்போதே யாரும் CM இல்லை.. விஜய்க்கு ஆதரவாக பரீனா ஆசாத் பதிலடி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த முறை பல்வேறு காரணங்களால் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக 85% வாக்குப்பதிவு என்பது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மிக உயர்ந்த அளவாக பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வந்தது இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விஜய் டிரஸ் கோட்: இந்த தேர்தலில் அரசியல் களத்தில் புதிதாக குதித்துள்ள நடிகர் விஜய் தனது பிரச்சாரங்களில் வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து வந்தது பெரிய அளவில் ட்ரெண்டானது. அது ஒரு சாதாரண உடை தேர்வாக இல்லாமல், ஒரு அரசியல் அடையாளமாகவே பேசப்பட்டது. அதன் தாக்கம் தேர்தல் நாளிலும் காணப்பட்டது. பல பிரபலங்கள் அதே "டிரஸ் கோடு"வில் வந்து வாக்களித்தனர். முதலில் நடிகர் சிபிராஜ் விஜயின் ஸ்டைலில் வந்து வாக்களித்தார். தொடர்ந்து நடிகர் விக்ரம், நடிகர் சிம்பு, ஜெய், இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் அதே மாதிரியான உடையில் வந்தனர்.

யாரு தற்குறி: இதில் நடிகையும், தொகுப்பாளினியுமான ஃபரீனா தங்களது சமூக வலைதளங்களில் அந்த உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தனர். இதனால், சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு நடிகை சரியான பதிலடி கொடுத்துள்ள நடிகை ஃபரீனா, என்னை DM-லும் unfollow-வும் செய்பவர்களுக்கு... நான் விரும்புகிறதற்கு வாக்களிப்பதால் நான் (தற்குறி) "கல்வியறிவில்லாதவள்" ஆகிவிட மாட்டேன். மற்றவர்களின் தேர்வை விமர்சிப்பதால் நீங்கள் "கல்வியுள்ளவர்" ஆகிவிட மாட்டீர்கள். எல்லோரும் பிறந்தபோதே முதல்வர் (CM) அல்ல. ஒருவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை. அரசியல் பாதை என்னவென்று கேட்கிறவர்களுக்கு சொல்றேன். இது புதிய அரசியல், இளைஞர்களின் அரசியல். நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இனிமே இதுதான் அரசியல் என தரமான பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி பலரும் பரீனாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஃபரீனா ஆசாத்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஃபரீனா ஆசாத், பிரியாத வரம வேண்டும் என்ற சீரியலில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரது நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.


Click it and Unblock the Notifications