மரியாதையா இதைப் பண்ணுங்க.. VJS கை காலை கட்டிப்போட்டு பாக்க சொல்லணும்.. BB குறித்து பிரபலம் பகீர்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 என்று சொன்னாலே கடந்த 8 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறித்தனமாக பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் பலருமே கொஞ்சம் கடுப்பாகத்தான் நம்மை எதிர் கொள்கிறார்கள். சேனல் மீதுதான் முதல் தவறு என்று சிலரும், லாயக்கு இல்லாத போட்டியாளர்கள் என்று ஒரு தரப்பினரும், பிக்பாஸ் மேலயே தப்பு இருக்கு என்று ஒரு சாரரும் கூறுவதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இந்த சீசன் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவீந்திரன் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் பலரது மனக்குமுறலின் பிரதிபலிப்பு என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சீசனில் ஆரம்பத்தில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்கள், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அதன் பினர் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பபட்ட ஆதிரை என மொத்த போட்டியாளர்களும் ரசிகர்களை தொடர்ந்து அப்செட் ஆக்கி வருகிறார்கள். ஆதிரையை உள்ளே அனுப்பி இரண்டாவது வாய்ப்பு கொடுத்ததற்கு பதிலாக பிரவீன் ராஜ்க்கு அந்த இரண்டாவது வாய்ப்பை கொடுத்திருக்கலாம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

ஃபேட் மேன் ரவி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ஃபேட் மேன் ரவீந்திரன் இந்த வார எபிசோட்களைப் பார்த்து தனது விமர்சனத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது அவர் கூறும்போது, " யாரு சாமி இவர்கள் எல்லாம், எங்கிருந்து இந்த போட்டியாளர்களை கண்டுபிடித்தீர்கள்? ஏதோ ஒரு இடத்தில் நாம் செய்வது நமக்கே அசிங்கமாக இருக்கும், ஆனால் அனைத்து போட்டியாளர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். மரியாதையாக ஹாட் ஸ்டார் சப்ஸ் கிரைப் செய்தவர்களுக்கு எல்லாம், 5 கிலோ பாசுமதி அரிசி, 10 தலைவலி தைலம், காதுக்கு வைக்க பஞ்சு உள்ளிட்டவற்றை பிக்பாஸ் தரப்பில் இருந்து கொடுக்க வேண்டும்.

விளாசல்: இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பது அவ்வளவு சவாலாக உள்ளது. விஜய் சேதுபதியை கை, காலைக் கட்டிப் போட்டு, பிரேக்கே விடாமல் லைவ் பார்க்க வைத்திருக்க வேண்டும். இந்த சீசனுடன் விஜய் சேதுபதி ரிட்டயர்டு ஆகிறாரோ இல்லையோ, இந்த சீசனுடன் நாம் ரிட்டயர்டு ஆகி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். நல்ல வேளை கமல்ஹாசன் சார் எல்லாம் தப்பித்துக் கொண்டார். அவர் இது போல எல்லாம் நடக்கும் என்று தெரிந்து கொண்டுதான் முன்னரே வெளியேறிவிட்டார்" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சில ரசிகர்கள் தங்கள் மனதில் உள்ளதை ரவீந்தர் பேசிவிட்டார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











