பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஃபாத்திமா பாபு.. முதல் ஆளாக நுழைந்தார்.. முதல் ஆளாக சென்றார்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Highlights :வனிதா மதுவை நடிக்கிறாள் என புரணிப்பேச்சை ஆரம்பித்தார்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

விஜய் டிவியில் கடந்த 23ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 16 பிரபலங்கள் பங்கேற்றனர்.

போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லை என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் நாமினேஷன் புராசஸ் தொடங்கியது.

எவிக்ஷன் லிஸ்டில் 7 பேர்

எவிக்ஷன் லிஸ்டில் 7 பேர்

ஹவுஸ் மேட்ஸால் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அதன்படி கவின், மதுமிதா, மீரா, சேரன், சாக்ஷி, ஃபாத்திமா பாபு, சரவணன் ஆகியோர் எவிக்ஷன் லிஸ்டில் இடம் பெற்றனர்.

ஃபாத்திமா பாபு வெளியேற்றம்

ஃபாத்திமா பாபு வெளியேற்றம்

லிஸ்டில் உள்ளவர்களில் மக்களின் குறைந்த வாக்குகளை பெறும் நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஃபாத்திமா பாபு நேற்று வெளியேற்றப்பட்டார்.

பிரச்சனையை தீர்க்க முயன்றவர்

பிரச்சனையை தீர்க்க முயன்றவர்

பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற பிரபலங்களில் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டவர் ஃபாத்திமா பாபு. யாரிடமும் சண்டை போடாமல் வீட்டுக்குள் சண்டை நடப்பதையும் விரும்பாமல் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நடந்து கொண்டவர் ஃபாத்திமா பாபு.

சாக்ஷி மீது வெறுப்பு

சாக்ஷி மீது வெறுப்பு

இதனால் ஃபாத்திமா பாபுவுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் இல்லாததை சொல்லி வீட்டிற்குள் பிரச்சனையை ஏற்படுத்தியவர் சாக்ஷி. இதனால் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

யாரும் எதிர்பார்க்கவில்லை

யாரும் எதிர்பார்க்கவில்லை

இதன்காரணமாக சாக்ஷிதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

கவின், சாக்ஷி, சரவணன், மீரா, சேரன் ஆகியோர் சேவ் செய்யப்பட்டனர். ஃபாத்திமா பாபுதான் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நுழைந்தார். அவர்தான் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X