எடுப்பார் கைப்பிள்ளை.. டாமினன்ட்.. பிராப்ளம் கிரியேட்டர்.. புட்டு புட்டு வைத்த ஃபாத்திமா பாபு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Highlights :வனிதா மதுவை நடிக்கிறாள் என புரணிப்பேச்சை ஆரம்பித்தார்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஃபாத்திமா பாபு சக ஹவுஸ் மேட்ஸ் குறித்து துல்லியமான கருத்தை புட்டு புட்டு வைத்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் ஃபாத்திமா பாபு. வீட்டில் இருந்து வெளியே வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனுடன் உரையாற்றினார்.

அப்போது வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ்கள் குறித்து துல்லியமாக கூறினார் ஃபாத்திமா பாபு. ஃபாத்திமா பாபு ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் பேசிய போது பார்வையாளர்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

பிராப்ளம் கிரியேட்டர்

பிராப்ளம் கிரியேட்டர்

குறிப்பாக வனிதா விஜயகுமார் குறித்தும் மோகன் வைத்யா குறித்தும் பேசிய போது ரசிகர்கள் அப்படியொரு கரகோஷத்தை கொடுத்தனர். வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டின் பிராப்ளம் கிரியேட்டராக உள்ளார்.

மக்களுக்கு பிடிக்கவில்லை

மக்களுக்கு பிடிக்கவில்லை

எப்போதும் யாரைப்பற்றியாவது பின்னாடி பேச வேண்டியதுமாகவும் யாரிடமாவது சண்டை போடுவதுமாக உள்ளார். இதனால் அவரைக் கண்டாலே மக்களுக்கு பிடிக்கவில்லை.

புட்டு புட்டு வைத்த ஃபாத்திமா

புட்டு புட்டு வைத்த ஃபாத்திமா

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஃபாத்திமா பாபு ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்தார். அவர் வனிதா குறித்து பேசியதாவது, வனிதா மற்றவர்களை டாமினேட் செய்து வருகிறார்.

தான் செய்வது தான் சரி

தான் செய்வது தான் சரி

தான் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வது அனைத்தும் தவறு என மற்றவர்களை மட்டம் தட்டி வருகிறார். இதனால் அவரை எதிர்த்து பேச முடியாமல் சிலர் உள்ளனர். சிலர் அவரது குணம் புரிந்து அவரிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டனர்.

மரியாதையை காப்பாற்றிக்கொள்ள

மரியாதையை காப்பாற்றிக்கொள்ள

ஆனாலும், ரேஷ்மா, சாக்ஷி, மீரா, கவின், ஷெரின் ஆகியோர் இன்னும் வனிதாவின் பேச்சைதான் கேட்டுக்கொண்டிருக்கிறார். அபிராமி இன்றுதான் விழித்துக்கொண்டிருக்கிறார். வனிதாவின் நடவடிக்கை பலருக்கு பிடிக்கவில்லை. சேரன் தனது மரியாதையை குறைத்து கொள்ளக்கூடாது என அவரை எதுவும் கேட்பதில்லை.

வனிதாதான் பிரச்சனை

வனிதாதான் பிரச்சனை

இதேபோல் சரவணன், சாண்டி ஆகியோர் நமக்கு எதற்கு பிரச்சனை என ஒதுங்கியிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் வனிதாதான் பிரச்சனையை உருவாக்கி வருகிறார். இவ்வாறு வனிதா குறித்து ஃபாத்திமா பாபு பேசினார்.

தனது இயல்பில் இல்லை

தனது இயல்பில் இல்லை

மோன் வைத்யா குறித்து ஃபாத்திமா பாபு பேசியதாவது, மோகன் வைத்யா முழுக்க முழுக்க வனிதாவுக்கு அடிமையாகிவிட்டது போல நடந்து கொள்கிறார். மோகன் வைத்யா தனது இயல்பு நிலையில் இல்லை.

எடுப்பார் கைப்பிள்ளை

எடுப்பார் கைப்பிள்ளை

மோகன் வைத்யா எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டார். மற்றவர்களின் பேச்சைக் கேட்டுதான் மோகன் வைத்யா நடந்து கொள்கிறார் என்றார். வனிதா குறித்தும் மோகன் வைத்யா குறித்தும் ஃபாத்திமா பாபு பேசியதுபோது, உண்மைதான் என்பதை போல அதிரும் அளவுக்கு கரகோஷத்தை அளித்தனர் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X