Bigg Boss 3 Tamil: செய்திகள் வாசிப்பது.. ஃபாத்திமா பாபுவின் மறுபக்கம்
Recommended Video
சென்னை: செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு முதல் நாள் செய்தி வாசிப்பின் போதே, மக்களை தன்பால் ஈர்த்தவர். அட இப்படி வந்தும் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கலாமா என்று ஆச்சரியப்பட ஆசைப்பட வைத்தவர்.
செய்தி வாசிப்பின்போது இவர் கடைப்பிடிக்கும் ஒரு ஸ்டைல் இவரை செய்தி வாசிப்பாளராக ரசித்த அனைவருக்கும் தெரியும். நல்ல உயரம், அழகிய மெல்லிய உடல்வாகு, அழகிய முகம், வசீகர சிரிப்பு என்று அனைவரையும் கவர்ந்தவர் ஃபாத்திமா பாபு
பாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். முதல் பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகன் பள்ளி இறுதிப் படிப்பில் இருக்கார்.

புத்தகங்கள் பிடிக்கும்
பாண்டிச்சேரியில் கல்லூரி படிப்பின் போதே கவிதை, பாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, நடனம் என்று கலக்கியவர். சிறு வயதில் அதாவது 10 வயதுக்குள்ளேயே கதைகள், நாவல்கள் படிப்பதில் நிறைய ஆர்வம் இருந்ததாம். காரணம் வீட்டில் அம்மா வார இதழ்கள், மாத இதழ்கள் விரும்பி படிப்பதைப் பார்த்து இவரும் படிக்க ஆரம்பித்து இருக்கார். அதிக பட்சம் தமிழ் புத்தகங்கள்தான் விரும்பி படித்ததாகவும் கூறுகிறார்.

வாசிப்பது ஃபாத்திமா
இந்த சமயத்தில்தான் தூர்தர்ஷனுக்கு செய்தி வாசிப்பாளர்கள் தேவை என்கிற விளம்பரம் வந்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு,சென்னைக்கு வந்தவர், செய்தி வாசிக்க தேர்வும் ஆனார். செய்தி வாசிப்பாளராக ஷோபனா ரவி, நிர்மலா பெரியசாமி போன்றவர்கள் செய்தி வாசிப்பில் கொடிகட்டி பறந்த நேரம் அது.

மல்லிகைப் பூ
ஷோபனா ரவி போர்த்திக்கொண்டு செய்தி வாசிப்பார். நிர்மலாபெரிய சாமி தனக்கென்று ஸ்டைல் எதுவும் வைத்திருக்கவில்லை. ஃபாத்திமா முதன்முறையாக ஃப்ரீ ஹேர் விட்டு, தலையில் தொங்கும் மல்லிகைப் பூவுடன் செய்தி வாசித்தது ரசிகர்களிடையே ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணியது என்று கூட கூறலாம்.

அடுத்த செய்திக்கும்
ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில் கொஞ்சம் கேமிராவைப் பார்த்து கண் சிமிட்டி சிரிப்பார்.இது அவரது ஸ்டைல். சோக செய்தி என்றால் மட்டும் அந்த ஸ்டைலை கைவிட்டு விடுவார். ஹாஸ்டலில் தங்கி இப்படி செய்தி வாசிப்பாளராக இருந்த அவருக்கு, பாதுகாப்பும், அரவணைப்பும் தேவைப்பட்டது. அப்போதுதான் தன்னை துரத்தி துரத்தி காதலித்த பாபுவை பற்றி, தானே அங்கங்கு சென்று விசாரித்து திருப்தியான நிலையில் பாபுவுக்கு ஓகே சொல்லி இருக்கார்.

நடிக்க வந்தது
தூர்தர்ஷனில் குறிஞ்சி மலர் என்கிற ஒரு நாடகத்தில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் நடித்ததோடு பல வருடங்கள் நடிக்காமலே இருந்தார். பிறகுதான் கே. பாலச்சந்தரின் கல்கி படத்தில் மல்கோவா மாமியா நடித்தார்.

பாரதிராஜா படத்தில்
ஃபாத்திமா பாபு செய்தி வாசிக்க வந்த நேரத்தில்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா, என்னுயிர் தோழன் என்று ஒரு படம் இயக்க தயாராக இருந்தார்.அவருக்குத்தான் கதாநாயகியை எப்போதும் கடைசியில் தேர்வு செய்வது வழக்கமாயிற்றே. அப்படி அவர் சடனாக பார்த்து ஃபாத்திமாவை கதாநாயகியாக நடிக்க அழைத்த போது மறுத்துவிட்டார் என்று கூட ஒரு பேச்சு அப்போது இருந்தது.

ஆசைப்பட்டு ஆனால்...
இரண்டு ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு ஒரு குழந்தையை சுமந்து வந்த நேரத்தில், வயிற்றில் குழந்தையோட எட்டாவது மாசத்தில் குழந்தை வயிற்றில் எந்த அசைவும் இல்லாமலிருக்க, டாக்டர் குழந்தை உயிரோடு இல்லை என்று சொன்னாராம். உடனடியாக ஆப்ரேசன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துவிட வேண்டும்.இல்லை என்றால் உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியுமென்று எச்சரித்தாராம்.

தொகுத்து வழங்க
இரண்டு நாளில் ஒரு ஈவண்ட் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதால், ஆபரேஷனை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு, அதை முடித்து கொடுத்துவிட்டு, தன் உயிரில்லாத பெண் குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்த அந்த குழந்தையைப் பார்த்த போது, எல்லாவற்றையும் சேர்த்து வைத்து குமுறி அழுததாக ஒரு நேர்காணலில் அழுகையோடு சொல்லி இருக்கார் .
இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஃபாத்திமா பாபு எப்படி நம் மனதைக் கவர்கிறார் என்று பார்க்கலாம்.

வெளியில் தாலிச்செயினை
இவரிடம் இன்னொரு அரிய பழக்கம் இருக்கிறது. எந்த விழாவுக்கு சென்றாலும் சரி, தனது தாலிச் செயினை புடவைக்கு வெளியில்தான் போட்டு இருப்பார். இது இவருக்கு ஒருவித பெருமிதமாகக் கூட இருக்கலாம்.அவர் கணவர் பாபுவை மனதார காதலித்து வருவதின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம்.
இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஃபாத்திமா பாபு எப்படி நம் மனத்தைக் கவர்கிறார் என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











