BB8: இதயம் 'டப்'புன்னு வெடிச்சுடுச்சு.. அர்ச்சனா இப்படி சொல்வாங்கன்னு எதிர்பார்க்கல.. ரவீந்தர் ஷாக்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 8வது சீசனாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் 8 நிகழ்ச்சி. இந்த சீசனில் கடந்த சீசன்களைபோல இல்லாமல் பல வித்தியாசங்களை நிகழ்ச்சி தரப்பு புகுத்தியுள்ளது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று இந்த ஷோவின் புதிய ஆங்கராக களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
கடந்த 7 சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக மாறியுள்ள நிலையில், நிகழ்ச்சியின் பல்வேறு சுவாரஸ்யங்களை தனக்கேயுரிய ஸ்டைலில் அவர் புகுத்தி வருகிறார். அவர் போட்டியாளர்களை மிகவும் அன்பாகவும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் எதிர்கொண்டு வருகிறார்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக 7 சீசன்களை அதிரடி சரவெடியாக முடித்துள்ளது பிக்பாஸ் ஷோ. தற்போது இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த ஏழு சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்த நிலையில், இந்த சீசனில் புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். அவரது புதிய ஹோஸ்ட்டிங்களில் இந்த சீசன் களைகட்டி வருகிறது. கடந்த 6ம் தேதி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரு வாரங்களாக நிகழ்ச்சியின் வாரயிறுதிகளில் நிகழ்ச்சியில் தோன்றி போட்டியாளர்களிடம் சாட்டையை சுழற்றி வருகிறார் விஜய் சேதுபதி.
முதல் வார எலிமினேஷன்: இந்த நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனாக தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரத்தில் சீரியல் நடிகர் அர்ணவ் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை பார்க்க முடிந்தது. இதையடுதது இந்த வாரத்திற்கான நாமினேஷன் உள்ளிட்டவை நடத்தப்பட்டு தற்போது இந்த வார எலிமினேஷனாக அன்ஷிதா தான் இருக்கப் போகிறார் என்ற தகவ்லகள் வெளியாகியுள்ளன. இன்னும் இரு தினங்களில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் குறித்து தெரியவரும். கடந்த வாரத்தில் நிகழ்ச்சியில் தோன்றி பலரையும் வறுத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி இந்த வாரம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது,
அருண் குறித்து பேசிய அர்ச்சனா: இதனிடையே முதல் வார எலிமினேஷனாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஃபேட்மேன் என்று அழைக்கப்படும் தயாரிப்பார் ரவீந்தர் நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா சமீபத்தில் தன்னை சந்தித்ததாகவும் அவர் பேசிய ஒரு விஷயம் தன்னுடைய இதயத்தை டப் என்று வெடிக்க செய்ததாகவும் ரவீந்தர் பேசியுள்ளார். முதலில் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய ஆட்டம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கவர்ந்தது குறித்து பேசிய அர்ச்சனா, தொடர்ந்து நிகழ்ச்சியில் அருண் ஆடுவதை பார்த்து தனக்கு சங்கடமாக இருப்பதாக கூறியதாக ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
ஷாக்கான ஃபேட்மேன்: கடந்த சீசனில் தனக்கு வந்த வாய்ப்பைதான் அருண் அர்ச்சனாவிற்கு கொடுத்ததாகவும் ஆட்டத்தை ஆட அவர்தான் சொல்லிக் கொடுத்ததாகவும் தன்னிடம் அர்ச்சனா கூறியதை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ஃபேட்மேன் கூறியுள்ளார். என்னது அருண் சொல்லிக் கொடுத்து ஆடி அர்ச்சனா டைட்டிலை வெற்றிக் கொண்டார்களா என்று தனக்கு தோன்றியதாகவும், இதை தன்னிடம் கூறியதாக வேறு யாரிடமும் சொல்லிடாதம்மா என்றும் ரவீந்தர் மேலும் கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து பேசிய அவர், தான் நிகழ்ச்சியில் அர்ணவை ஃபேக் என்று பலமுறை கூறியுள்ளதாகவும் ஆனால் அருணை அவ்வாறு பேசியதில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அருண் ஏன் நடிக்கிறார்?: ஆனாலும் அருண் ஏன் இன்னமும் அப்பாவியாக நடிக்கிறார் என்றும் ரவீந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். பாரதி கண்ணம்மா தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ஏன் தொடர்ந்து அருண் நடிக்கிறார் என்றும் ஃபேட்மேன் கேள்வி எழுப்பியுள்ளார். அருண் குறித்து அர்ச்சனாவின் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து ஜாக்குலின், முத்து உள்ளிட்டவர்களின் குணாதிசயங்களையும் ரவீந்தர் விமர்சித்துள்ளார். பெண்களிடமிருந்து நல்ல பெயரை வாங்க அதிகமாக பாடுபட்டவர் அர்ணவ் என்றும் ரவீந்தர் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











