Bigg Boss: விஜய் சேதுபதி செய்தது தப்பு.. சான்ட்ராவை பார்த்து அந்த வார்த்தையை ஏன் கேட்கல? பிரபலம் பளீர்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வார நாட்கள் கொஞ்சம் டல் அடித்தாலும், நிகழ்ச்சியை பரபரப்பாக்க விஜய் சேதுபதி தனது ஸ்டைலில் போட்டியாளர்களை கையாள்வது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மசாலா விருந்து வைத்தது போல ஆகிவிடுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு உள்ள சிக்கல் என்றால் அது, முதல் 7 சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் உடன் தன்னை ஒப்பிடுவதை தவிர்க்க முடியாத ஒன்று. இப்படி இருக்கும்போது 7வது வார இறுதியில் சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதியின் அணுகுமுறை பல கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. இதை பிக்பாஸ் விமர்சகர் ஃபேட்மேன் ரவி கடுமையாக விமர்சித்துள்ளார். '

அதாவது, " இதற்கு எல்லாவற்றிகும் காரணமான சான்ட்ராவை திட்டாமல், சான்ட்ரா நீ பாவம், உனக்கு ஒன்னும் தெரியாது, எல்லாத்துக்கும் காரணம் திவ்யாதான். ஒன்னும் தெரியாத குழந்தை நீ, உன்னை பக்கத்துலயே வெச்சு ஏமாத்திட்டாங்க என்று கூறுகிறார். இதற்கு முன்னர் திவாகரும் பார்வதியும் இதுபோல செய்து கொண்டிருந்த போது, ஒரு கோமாளி தேவை, அப்போது கம்ரூதின் என்று ஒருவர் இருந்தார். பார்வதியும் திவாகரும் பெரிய பிரச்னை செய்திருப்பார்கள் அதை அட்ரஸ் செய்யமாட்டார். ஆனால் கம்ருதீனை திட்டிக் கொண்டே இருப்பார்.

Fatman Ravinder Slams Vijay Sethupathi Approach To Sandra For Bigg Boss November 22nd Episode
Photo Credit:

திவ்யா பலிகிடா: முதல் இரண்டு வாரத்தில் கம்ருதீனால் எழுந்திருக்கவே முடியவில்லை. திவ்யாவுக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். திவ்யா உண்மையை சொல்லுகிறாரோ, பொய் சொல்கிறாரோ, ஆனால் உடல்நிலை சரியில்லை என்று நம்புகிறோம் என்று சொல்லிவிட்டு, திவ்யாவைத்தான் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தீர்கள். திவ்யாவிடம் எந்தத் தொனியில் பேசினீர்களோ, அதே தொனியில் சான்ட்ராவிடமும் பேசியிருக்க வேண்டும் தானே? உனக்கு ஒரு வேலையைச் சொன்னால், அதை செய்ய வக்கில்லை என்று திவ்யாவைப் பார்த்து கேட்கும் விஜய் சேதுபதி, சான்ட்ராவைப் பார்த்து கேட்காதது ஏன்? அப்படிக் கேட்டால் பிரஜன் கோபித்துக் கொள்வார் என்று விட்டுவிட்டாரா?

பிரஜன்: ஏன், திவ்யா வீட்டில் எல்லாம் அப்பா, அம்மா கிடையாதா? பிரஜன் நீங்க கோபப்படாதீங்க என்று சொல்லும் விஜய் சேதுபதி, சான்ட்ராவைப் பார்த்து வக்கில்லையா என்று கேட்க வேண்டியதுதானே? இந்த வார்த்தையை திவ்யாவிடம் கேட்டுவிட்டு, சான்ட்ராவிடம் கேட்கவில்லை என்றால், அது ஓரவஞ்சனை தானே? சான்ட்ரா மற்றும் திவ்யா என இருவரும் தப்பு செய்தவர்கள். பிக் பாஸ் சொன்னதையும் கேட்க மறுத்தவர்கள். சனிக்கிழமை எபிசோடில் நடைபெற்றது, பக்காவான டுபாகூர் நரேட்டிவ் செட்டிங், மக்களே ஏமார்ந்துவிடாதீர்கள்" என்று விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் விஜய் சேதுபதியின் இந்த அணுகுமுறையையும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Fatman Ravinder Slams Vijay Sethupathi Approach To Sandra For Bigg Boss November 22nd Episode
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X