கவினால் கடுப்பான தர்ஷன்.. வக்காலத்து வாங்கிய லாஸ்.. உடைந்த பாய்ஸ் கேங்! என்னலாம் நடக்கபோகுதோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பிஸிக்கல் டாஸ்க்கினால் பாய்ஸ் கேங்கில் மோதல் ஏற்பட்டுள்ளது.
டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கியதில் இருந்து பாய்ஸ் கேங்கில் உள்ளவர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.
இதுவரை எந்த டாஸ்க்கிலுமே அவ்வளவு ஈடுபாடு காட்டாமல் இருந்த கவின், நேற்று முதல் அதிரடி காட்டி வருகிறார்.
அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாய் டெர்ம்ஸ் சரியில்லாமல் உள்ளது. நேற்று காலை, தனக்கென சுய சிந்தனை இல்லாமல் கூட்டத்துடன் ஒளிந்து வாழ்கிறார் கவின் என்று கூறினார் தர்ஷன்.

தெர்மா கோல் மூட்டை
அப்போதே கவின் முகம் மாறிவிட்டது. இந்நிலையில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் சுற்றிவந்து முதுகில் மாட்டப்பட்டிருந்த தெர்மா கோல் பையை கிழித்து தெர்மா கோலை வெளியேற்ற வேண்டும். இந்த போட்டி முதல் புரமோவிலேயே தெரியவந்தது.

இரண்டாவது புரமோ
இதில் லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் விழுந்து வாரினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

முதல் ரவுண்டிலேயே
அதில் கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுவது தெரிய வந்துள்ளது. அதாவது கவின், தர்ஷனை ஓட விடாமல் முதல் ரவுண்டிலேயே அவரது பையை பிடித்து இழுத்துள்ளார்.

கோபம் வரும்
இதனால் கடுப்பான தர்ஷன், கவினுடன் சண்டை போடுகிறார். பேக்கை பிடித்து இப்படி இழுத்தால் எனக்கு கோபம்தான் வரும் என கவினிடம் கூறுகிறார் தர்ஷன்.

கவினுக்கு வக்காலத்து
இதனைக்கேட்ட லாஸ்லியா, எல்லோருமே அப்படிதான் செய்தார்கள் என கவினுக்கு வக்காலத்து வாங்கி தர்ஷனிடம் எகிறுகிறார். யாரும் அப்படி பண்ணல என அவருக்கு பதில் கூறுகிறார் தர்ஷன். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

எதிர்பார்க்க முடியாது
டிக்கெட் டு பினாலே டாஸ்க்கால் பாய்ஸ் கேங்கிற்குள் மோதல் வெடித்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இனிமேல் பிரன்ட்ஸ், தியாகம் என்ற வார்த்தையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் கேட்கவே முடியாது, இனிதான் ஒவ்வொருவரின் சுயரூபமும் தெரியவரும் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











