twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொண்ணுதானே நீங்க.. உங்களை இடிக்கவா.. மும்தாஜூடன் மல்லுக்கட்டும் பாலாஜி!

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ்க்கும் பாலாஜிக்கும் இன்று கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

    |

    சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ்க்கும் பாலாஜிக்கும் இன்று கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் எது இருக்கிறதோ இல்லையோ சண்டைக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை. விளையாட்டு என்றால் கூட போட்டியாளர்களுக்கு இடையே உள்ள ஈகோவால் சண்டையில்தான் முடிகிறது.

    நேற்றைய டாஸ்க்கின் போது ஐஸ்வர்யா, வைஷ்ணவி, மகத், டேனி இடையே சண்டை மூண்டது. போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் அடித்துக்கொள்ளாத குறையாக சண்டைபோட்டு கொள்கின்றனர்.

    மும்தாஜை விளாசும் பாலாஜி

    மும்தாஜை விளாசும் பாலாஜி

    இந்நிலையில் இன்றைய எபிசோடிலும் போட்டியாளர்களுக்குள் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கான ப்ரமோவில் மும்தாஜை விளாசி தள்ளுகிறார் பாலாஜி.

     உங்களை இடிக்கவா?

    உங்களை இடிக்கவா?

    நீங்க ஒரு பொண்ணுதானே.. நீங்க எப்படி அப்படி பேசுவீங்க.. அவன் கேஸ்ல உள்ள போயிடுவான். நான் அந்தமாதிரி உங்களை இடிக்கவா என சகட்டுமேனிக்கு கிழிக்கிறார்.

     கத்தும் மும்தாஜ்

    கத்தும் மும்தாஜ்

    என்னிடம் ஏன் கோபப்படுறீங்க.. என்கிட்ட கத்தாதீங்க என பதிலுக்கு மும்தாஜும் கத்துகிறார். ஆக இன்றைய எபிசோடிலும் முட்டல் மோதல்கள் இருக்கிறது என்று உறுதியாகியுள்ளது.

     கடுபேற்றும் கன்டஸ்டன்ட்ஸ்

    கடுபேற்றும் கன்டஸ்டன்ட்ஸ்

    ஏற்கனவே ஹைஜீனிக் ஹைஜீனிக் என்று வீட்டில் உள்ளவர்களை கடுப்பேற்றி வருகிறார் மும்தாஜ். கெட்டவார்த்தைகளை பேசியும் அடுத்தவர்களை பற்றி புறம்பேசியும் நெட்டிசன்களிடம் வசை வாங்கி வருகிறார் பாலாஜி.

     கதறிய மும்தாஜ்

    கதறிய மும்தாஜ்

    இவர்கள் இருவரும் இன்று முட்டி மோதிக்கொள்கின்றனர். ஐஸ்வர்யா சர்வாதிகார டாஸ்க்கின் போது பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அப்போது கதறி அழுதார் மும்தாஜ் என்பது நினைவுகூரத்தக்கது.

    English summary
    Fight between Balaji and Mumtaz in biggboss house. Balaji scolding Mumtaz in the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X