அப்படின்னா வீட்டுக்கு போ.. இங்கே ஏன் வந்த? மீராவை வாங்கு வாங்கென்று வாங்கிய வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil: தன்னை தானே சூப்பர் மாடல் என்று பெருமை கூறும் மீரா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதா - மீராவுக்கு இடையிலான சண்டை உச்சத்தை எட்டிவிட்டது. அடித்துகொள்ளாத குறையாக சண்டை போட்டுக்கொண்டனர் இருவரும்.

பிக்பாஸ் வீட்டின் ஐந்தாம் நாள் காட்சிகள் நேற்றிரவு ஒளிபரப்பானது. இதில் பல தரமான சம்பவங்கள் அரங்கேறின.
குறிப்பாக வனிதாவுக்கும் மீராவுக்கும் இடையிலான சண்டை. ஏற்கனவே கத்தி பேசும் வனிதா, மீரா எப்போது சிக்குவார் என காத்திருக்கிறார்.

அதற்கு ஏற்றார்போலவே கன்டென்ட் கொடுக்கிறார் மீரா. யார் சொல்வதையும் காதில் கொஞ்சம் கூட கேட்காமல் தான் பேசுவதுதான் சரி என்கிறார் மீரா.

டாய்லெட் கழுவ போ

டாய்லெட் கழுவ போ

நேற்றைய எபிசோடில் பாத்திரம் கழுவ முடியவில்லை என்று கூறினார் மீரா. இதைத்தொடர்ந்து கேப்டனான வனிதா, பாத்திரம் கழுவ விருப்பமில்லாவிட்டால் டாய்லெட் கழுவ போ, என்கிறார்.
இதனால் ஏற்படுகிறது பிரச்சனை.

உரிமை இருக்கிறதா இல்லையா?

உரிமை இருக்கிறதா இல்லையா?

சாய்ஸை நீங்கள் மாற்ற முடியாது என்கிறார் மீரா. இதனால் ஹவுஸ் மேட்ஸிடம் டிப்பார்ட்மென்டை மாற்ற எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என கேட்கிறார் வனிதா.

நீங்கள் என் அப்பா அம்மா இல்லை

நீங்கள் என் அப்பா அம்மா இல்லை

அப்போது உஷ்ணம் உச்சிக்கு ஏற என்னிடம் கத்தி பேச நீங்கள் ஒன்றும் என் அப்பாவோ அம்மாவோ இல்லை என்று கூறிவிட்டு அழுதபடியே ரூமை விட்டு வெளியே போகிறார் மீரா. அப்படியானால் நீ உன் அப்பா அம்மாவிடமே செல்.

எல்லாத்துக்கும் லிமிட் இருக்கிறது

எல்லாத்துக்கும் லிமிட் இருக்கிறது

உன் வீட்டுக்கு போ, இங்கே இருக்காதே என கத்துகிறார் வனிதா. உடனே எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது என கத்திவிட்டு அழுதுக்கொண்டே வெளியே செல்கிறார் மீரா. அவர் வெளியே போன பிறகும் டைனிங் ஹாலில் தொடருகிறது சண்டை.

பளிச்சென கேட்ட மதுமிதா

பளிச்சென கேட்ட மதுமிதா

இதில் பல சம்பவங்கள் வெளியாயின. சாக்ஷியையும் அபிராமியையும் மீரா மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து டைனிங் ஹாலில் பளிச்சென கேட்கிறார் மதுமிதா. அவரை தொடர்ந்து வனிதாவும் சாக்ஷி மீரா குறித்து கூறியதை கேட்டு மூக்கை உடைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X