அய்யோ பிக்பாஸ் வீட்டுல ஒரே அடிதடி... மகத் இது உங்களுக்கே ஓவரா தெரியல?
பிக்பாஸ் வீட்டில் இன்று நடக்கும் அடிதடிகள் குறித்து அதிரடி புரமோக்கள் வெளியாகி வருகின்றன.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்று நடக்கும் அடிதடிகள் குறித்து அதிரடி புரமோக்கள் வெளியாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியை போட்டியாளர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டே ஹிட்டாக்க நினைக்கிறார் போல நிகழ்ச்சி தயாரிப்பாளர்.
பிக்பாஸ் அளவுக்கு பிக்பாஸ் சீசன் 2 சுவாரசியமாக இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு கன்டன்ட் கொடுக்காதவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சியை ஹிட்டாக்க
இந்நிலையில் தற்போது இருக்கும் போட்டியாளர்களை வைத்து எப்படியாவது நிகழ்ச்சியை ஹிட்டாக்க டாஸ்க் என்ற பெயரில் சண்டையை மூட்டி விடுகின்றனர்.

அத்துமீறும் மகத்
குறிப்பாக மகத் விதிகளை மீறி ஒவ்வொரு வேலையும் செய்து வருகிறார். நேற்று எதிரணியின் டெடி பியர் செய்வதற்காக வைத்திருந்த காட்டனை அத்துமீறி பிடுங்கினார்.

திருடும் மகத்
இன்று அனைவரும் உள்ளே அமர்ந்திருக்கும் போது எதிரணியினர் பெட்டிக்குள் வைத்திருக்கும் பணத்தை ஓடிச்சென்று எடுக்கிறார். அவரை விரட்டி வரும் ரித்விகா, அவர்கள் வைத்திருக்கும் பணத்தை எடுக்கிறார்.

தள்ளிவிடும் மகத்
அப்போது துள்ளி பாய்ந்து வரும் மகத் பெண் என்றும் பாராமல் அவரை அடித்து தள்ளிவிடுகிறார். இதனால் சக போட்டியாளர்கள் கோபம் கொள்கின்றனர்.

நேராக திட்டுங்கள்
மகத்திற்கு பரிந்து பேசும் மும்தாஜ், அவரை திட்டும் பாலாஜியை பார்த்து கத்துகிறார். பின்னர் மகத்தை முகத்துக்கு நேராக திட்டுங்கள் என்கிறார் மும்தாஜ்.

அதற்கு அடிப்பாயா?
அதற்கு எனக்கென்ன பயம், அவன் என் தலையை சீவி விடுவானா என கொந்தளிக்கிறார் பாலாஜி. அப்போது ரித்விகாவும் அதற்காக நீ அடிப்பாயா என மகத்தை கேட்கிறார்.

இன்று தெரியும்
இப்படி அதிரடி புரமோக்கள் இன்றைய எபிசோடில் வெளியாகியுள்ளன. இந்த சண்டை இதோடு நின்று விடுகிறதா மேலும் தொடர்கிறதா என்பது இன்று இரவு 9 மணிக்கு தெரியவரும்.


Click it and Unblock the Notifications











