Lakshmi Stores Serial: சின்ன பிள்ளைங்க சண்டையா இருக்கே லட்சுமி ஸ்டோர்ஸ்ல!

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மத்திய அமைச்சர் சகுந்தலா தேவிக்கும், லட்சுமி ஸ்டோர்ஸ் மகா லட்சுமிக்கும் சின்ன பிள்ளைங்க சண்டை மாதிரி நடக்குது.

இப்போது எக்ஸ் கவுன்சிலர் கூட தப்பை செய்துட்டு, சட்டத்தை தன் பக்கம் வளைச்சுக்கிட்டு தப்பே செய்யாதவன் மாதிரி தில்லா சுத்திகிட்டு இருக்கான். அவன் பதவியில் கூட இப்போது இல்லைன்னாலும், முன்னால் கவுன்சிலர்ன்னு மக்களை மிரட்டறான். காலம் இப்படி இருக்கு...

மத்திய மினிஸ்டர் சகுந்தலா தேவி ஏதோ தப்பு செய்துட்டாங்களாம். அந்த ஆதாரம் அடங்கிய சிப் மகாலட்சுமி கையில் கிடைச்சுடுதாம். அதை வச்சு மகாலட்சுமி மினிஸ்டரை மிரட்டறாங்க.

ஜெயிப்பது நடக்கற காரியமா?

ஜெயிப்பது நடக்கற காரியமா?

மினிஸ்டர் சகுந்தலா தேவிக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் மேல ஒரு கண்ணா இருக்கு.அதை எப்படியும் வாங்கியே தீருவது என்கிற முடிவில் பல சதி வேலைகளை செய்யறாங்க. எல்லாமே ஃபிளாப் ஆகுது. மகா லட்சுமி எல்லாத்திலும் ஜெயிச்சுகிட்டு வர்றாங்க. ஒரு மினிஸ்டரை எதிர்த்து போராடி ஜெயிப்பது சந்தோஷம்தான் என்றாலும், மிகப் பெரிய போராட்டம் எதுவும் இல்லாமல் மகாலட்சுமி ஜெயிப்பது என்னவோ சின்ன பிள்ளைங்க சண்டை போட்டுக்கற மாதிரி வேடிக்கையா இருக்கு.

கலப்பட சாக்லேட் கம்பெனி

கலப்பட சாக்லேட் கம்பெனி

மினிஸ்டர் சகுந்தலா தேவி நடத்தும் சாக்லேட் கம்பெனியில் போதை மருந்து கலந்த சாக்லேட் விக்கறாங்க.அதுக்கான ஃபார்முலா பத்தி எல்லாம் பேசின வீடியோ இருக்கும் சிப் லட்சுமி ஸ்டோர்ஸ் மகா லட்சுமிகிட்ட வந்து சேர்ந்துருது. மகாலட்சுமியின் கணவர் தேவராஜ் சகுந்தலா தேவியின் லீகல் அட்வைசர். சிப்பை எப்படியாவது எடுத்துடணும்னு மகாலட்சுமியின் ஓரக்கத்தியை விட்டு, அனைவரையும் சினிமாவுக்கு அனுப்பிட்டு, சகுந்தலா தேவி தன் தம்பியோட சேர்ந்து, மகாலட்சுமியின் வீட்டுக்கு சிப் டிடெக்டரை கொடுத்தனுப்பி சிப்பை எடுத்துட்டு வர சொல்றாங்க.

வயிற்று வலி வந்துருது

வயிற்று வலி வந்துருது

மகாலட்சுமியின் பெண்ணுக்கு படம் பார்த்துக் கொண்டு இருக்கையில் வயித்து வலி வந்துருது. உடனே மகாலட்சுமி குழந்தையை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துடறாங்க. மருந்து எடுத்துட்டு வரலாம்னு போனால், அங்கு சிப் தேடிக்கிட்டு இருந்தவன் ஓடறான். மகாலட்சுமி துரத்த அவன் ஓடிடறான்.வீட்டுக்கு வந்து பார்த்தா,அவனிடம் இருந்து விழுந்த சிப் கிடக்கு. இந்த முறையும் மகாலட்சுமிக்கு வெற்றி.

ரவி தேஜா

ரவி தேஜா

மகாலட்சுமியின் கொழுந்தன் ரவிக்கும், கடையில் வேலை பார்க்கும் பாக்கிய லட்சுமிக்கும் எதிர்பாராத விதமா பீச்சில் கல்யாணம் நடந்துருது. இது மகாலட்சுமிக்கு மட்டும்தான் தெரியும். பாக்கியலட்சுமியின் தாத்தாவுக்கும் தெரியும். நாத்தனார் கமலா கல்யாணம் முடிஞ்சதும் இந்த கல்யாணத்தை வெளியில் சொல்லலாம்னு இவங்க இருக்க, மினிஸ்டர் சகுந்தலா தேவி பொண்ணு தேஜாவுக்குத்தான் ரவின்னு அண்ணன் தேவராஜ் மினிஸ்டருக்கு சத்தியம் செய்து கொடுக்கறார்.

சாமானிய மகாலட்சுமி

சாமானிய மகாலட்சுமி

மக்கு மினிஸ்டர் சாமானிய மகாலட்சுமிகிட்ட என் சிப்பை குடுத்துடு. இல்லேன்னா பெரிய விளைவுகளை நீ சந்திப்பே.உன் கடையில் வேலை பார்க்கும் பாக்கியலட்சுமியை கொன்னருவேன்னு மிரட்டறாங்க.பாக்கிய லட்சுமியை உன்னால டச் கூட பண்ண முடியாதுன்னு மகாலட்சுமி மினிஸ்டரை மிரட்டறாங்க. ரொம்ப ரொம்ப சாதாரண கதைங்க... ஸ்டார் காஸ்ட் வேஸ்ட்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X