ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Yesterday Episode: Day 2: Kavin : அபியின் காதலை ஊதாசீனப்படுத்திய கவின்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்த்தது போலவே பெரிய சண்டை உருவாகிவிட்டது.

பிக்பாஸ் வீட்டின் 16வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் உள்ளே வந்தார். அவர் வந்தது முதலே அபிராமியும் சாக்ஷியும் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கின்றனர்.

மீரா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது அபிராமிக்கும் சாக்ஷிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை என்பது நேற்றே உறுதியாகிவிட்டது. இதனால் விரைவில் பிக்பாஸ் வீட்டில் அடிதடி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீராவை பிடிக்கவில்லை

மீராவை பிடிக்கவில்லை

அதன்படி இன்றே அந்த சண்டை தொடங்கிவிட்டது. மிராவை தனக்கு பிடிக்கவில்லை என்பதை அனைவருக்கும் தெரியும் விதமாகவே நடந்து கொள்கிறார் அபிராமி.

அட்டிட்யூட் காட்டாதே

அட்டிட்யூட் காட்டாதே

இதனைக் கண்ட சேரன் நேற்று அப்படி நடந்துக்கொள்ளக்கூடாது என சாக்ஷிக்கு அட்வைஸ் செய்தார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில் அபிராமியிடம் உங்களுக்கு என்னுடன் பேச வேண்டாம் எனில் என்னிடம் இந்த அட்டிட்யூடை காட்டாதே என்கிறார்.

என்னிடம் பேசாதே

என்னிடம் பேசாதே

இதனை நக்கலாக பார்த்தப்படியே கேட்கும் அபிராமி, ஸ்டைலாக என்னிடம் பேசாதே என்று கூறி செல்கிறார். பின்னர் வீட்டின் கேப்டனான வனிதாவை அழைத்து வருகிறார் அபிராமி.

மீராவிடம் கத்தும் வனிதா

மீராவிடம் கத்தும் வனிதா

அப்போது பஞ்சாயத்தை தொடங்கும் வனிதா நடந்து முடிந்ததை இங்கு பேசக்கூடாது என மீராவுக்கு தனது குரலை உயர்த்தி அட்வைஸ் செய்கிறார். அப்போது காம் டவுன் என மீரா கூற, நீ என்னை காம் டவுன் என சொல்ல வேண்டாம் எனக்கூறி கத்துகிறார் வனிதா.

மீராவுக்கும் வனிதாவுக்கும் சண்டை

மீராவுக்கும் வனிதாவுக்கும் சண்டை

நீங்கள் கத்தி பேசினால் உங்களுக்குதான் பிபி ஏறும் என கூறுகிறார் மீரா. எனக்கு அதெல்லாம் வராது, இத்தனை வருஷத்தில் வந்ததில்லை என்கிறார் வனிதா கோபமாக. அவர்களுக்குள் வார்த்தை தடிக்கிறது.

ரணகளமான பிக்பாஸ் வீடு

ரணகளமான பிக்பாஸ் வீடு

அப்போது இதற்கு தான் காத்திருந்தேன் என்பதைப்போல கையை காட்டிவிட்டு செல்கிறார் அபிராமி. இவ்வாறாக உள்ளது அந்த ப்ரமோ. இந்த ப்ரமோவின் மூலம் பிக்பாஸ் வீடு ரணகளமாகியிருப்பது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X