ஒரு எபிசோடுக்கு பல லட்சம்!.... சின்னத்திரையில் சினிமா நடிகைகளின் சம்பளம்!!
சினிமாவில் பிரபலமான நடிகைகள் சின்னத்திரையில் நடுவராகவோ, நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ மாறுவது ஒன்றும் புதிய விசயமில்லை.
குட்டிபத்மினி, ராதிகா தொடங்கி இன்றைக்கு சிநேகா வரை பல வெள்ளித்திரை நடிகைகள் சின்னத்திரையில் கால்பதித்து விட்டார்கள்.
புதுப்புது சேனல்கள், போட்டிகளை சமாளிக்க நடிகர், நடிகையர்களை கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகின்றனர்.
சீரியல் நடிகர்களின் நடனப்போட்டி, ரியாலிட்டி ஷோ என டிவி சேனல்கள் களமிறங்க... புது யுகம் சேனல் ஒன்று சினிமா நடிகைகளை வரிசையாக களம் இறக்கிவிட்டது.

சங்கீதாவின் கலகலப்பு
வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த சங்கீதா விஜய் டிவியில் நடுவராக வந்தார். பின்னர் சன் டிவியில் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சிக்கு நடுவரானார். இப்போது முழுநேர தொகுப்பாளினியாகிவிட்டார். புதுயுகம் தொலைக்காட்சியில் ‘நட்சத்திர ஜன்னல்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது காபி வித்து அனு மாதிரி சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி இது.

இயக்குநர் பாலாவின் பேட்டி
தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை கூட்டிவந்துவிடுகிறாராம் சங்கீதா. டி.வி.களுக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன்னு விரதம் இருந்த பாலாவே சங்கீதாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

பிதாமகனில்
கதாநாயகியாக அறிமுகமான சங்கீதா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்யும் பெண்ணாக நடித்தார். இது அவருக்கு திருப்புமுனையை தந்த படமாகும். இந்த படத்தின் இயக்குநர் பாலாவிற்கு நன்றி கூறும் விதமாக ‘நட்சத்திர ஜன்னல்' நிகழ்ச்சியில் பேட்டி எடுத்துக்கிறார்.

நடிகை அபிராமி
வானவில், விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்த நடிகை அபிராமி சினிமாவை விட்டு விலகி நீண்ட காலம் மீடியாக்களின் கண்களில் கூட படாமல் இருந்தார். இப்போது அவரும் புதுயுகம் சேனலில் ரிஷிமூலம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது விவாத நிகழ்ச்சி. அழகான தமிழ் பேசும் அபிராமி, சினிமாவில் பார்த்ததை விட இதில் அழகாகவே இருக்கிறார்.

சினேகாவின் நிகழ்ச்சி
சினிமாவிலும், விளம்பரத்திலும் பிரபலமாக இருக்கும் நடிகை சினேகா, மேளம் கொட்டு தாலிகட்டு என்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.

லட்சங்களில் சம்பளம்
பிரபல நடிகைகளை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தும் டிவி சேனல் அவர்களுக்கு தினசரி சம்பளமாக ஒரு எபிசோடுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கிறதாம்.

ஆயிரம்தான்....
பிரபல டிவி சேனல்களில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ஆயிரத்தில்தான் இருக்கும். அதேசமயம் நடிகைகள் என்றால் அவர்களுக்கு மார்க்கெட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மட்டும் லட்சங்களில் கொடுப்பது புகைக்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம் பிரபல டிவி தொகுப்பாளர்களுக்கு.


Click it and Unblock the Notifications











