பிக் பாஸ் வீட்டில் பிளேபாயான மகத், வில்லியான மும்தாஜ், காமெடி பீசான பொன்னம்பலம்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு போட்டியாளர்களின் கேரக்டரே மாறிப் போய்விட்டது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஹீரோ, வில்லன்கள், காமெடியன்கள், ஹீரோயின்கள், கவர்ச்சிப் புயல்கள், குணச்சித்திர கலைஞர்கள் என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திரையிலும், பிக் பாஸ் வீட்டிலும் அவர்களிடம் காணப்படும் மாற்றங்கள் நிறைய உள்ளது.

ஹீரோயின்
ஜனனி ஐயர் சினிமாவில் ஹீரோயின். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ பாட்டிலாக இருக்கிறார். போலியாக நடிப்பதாகவும் பெயர் எடுத்துவிட்டார். ஹோம்லி நடிகையான அவர் பிக் பாஸ் வீட்டில் கவர்ச்சி காட்டுகிறார்.

ஐஸ்வர்யா
யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பல நேரங்களில் காமெடி பீசுகளாக உள்ளனர். ரித்விகாவோ இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போக வேண்டும் என்ற முடிவில் உள்ளார்.

கவர்ச்சி
ஒரு காலத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்த மும்தாஜ் தற்போது வில்லி ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறார். அவர் போலியாக நடிப்பது பல நேரங்களில் அப்பட்டமாக தெரிகிறது.

வில்லன்
நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி வில்லன் போன்று நடந்து கொள்கிறார். வில்லனான பொன்னம்பலம் குணச்சித்திர நடிகராகிவிட்டார். சென்றாயனும், டேனியும் வில்லன் பாதி, காமெடி பீஸு பாதியும் கலந்த கலவையாக உள்ளனர்.

துணை நடிகர்
படங்களில் துணை நடிகராக வரும் மகத் பிக் பாஸ் வீட்டில் பிளே பாயாக உள்ளார். யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டியை பார்த்து கடுப்பாகாதவர்களே இல்லை.


Click it and Unblock the Notifications











