சிஷ்யா.. ஐ வில் மிஸ் யு.. ஐயா முகென்.. அன்பு என்றும் அநாதையில்லை.. கலங்க வைத்த பிக்பாஸ்!
Recommended Video
சென்னை: இறுதி நாளை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் ஒலித்த பிக்பாஸ் குரல் இறுதியாக விடை பெற்றது பார்வையாளர்களை கலங்க செய்தது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நேற்று கிரான்ட் பினாலேவுடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியின் வின்னராக முகென் ராவ் தேர்வு செய்யப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது. மற்றொரு போட்டியாளரான சாண்டி ரன்னர் ஆனார். இருவரையும் கமல்ஹாசனே நவீன சாரட் வண்டியில் அழைத்து வந்தார்.

உருக்கமாக பேசிய பிக்பாஸ்
முன்னதாக வீட்டில் தனியாக பாட்டு பாடிக்கொண்டிருந்த சாண்டியையும் முகெனையும் லிவிங் ஏரியாவுக்கு அழைத்தார் பிக்பாஸ். லிவிங் ஏரியாவில் அமர்ந்திருந்த அவர்களிடம் மிகவும் உருக்கமாக பேசினார் பிக்பாஸ்.

அமைதியாக போகிறது
அதாவது, 105 நாட்கள் இந்த வீடு உங்களின் சிரிப்பு, அழுகை, சோகம் என அனைத்தையும் பார்த்தது. இத்தனை நாட்களாய் இந்த வீடு முழுவதும் உங்களின் சந்தோஷம் கதறல் அழுகை சிரிப்பு என அனைத்தும் ஒலித்துக்கொண்டிருந்த இந்த வீடு இன்னும் சற்று நேரத்தில் அமைதியாக போகிறது.

உணர்வாக இருந்தேன்
இந்த 105 நாட்களில் உங்களுக்கே தெரியாத உங்களின் பல முகங்கள் வெளிப்பட்டன. நீங்கள் சிரிக்கும் போது அழும்போது விளையாடும் போது ஒரு உருவமாக உங்களுடன் இல்லாவிட்டாலும் ஒரு உணர்வாக உங்களுடன் இருந்தேன்.

கலங்கிய பார்வையாளர்கள்
உங்களை கண்டித்து, அரவணைத்து உங்களின் தோழனாக, உங்களின் ஆசானாக இருந்த இந்த குரல் இப்போது விடை பெறுகிறது. இது பிக்பாஸ் என்று இறுதி உரையாக கூறி கலங்க செய்தார் பிக்பாஸ். இதனை கேட்டு சாண்டியும் முகெனும் குருநாதா குருநாதா என்று கலங்கினர். பிக்பாஸின் இறுதி உரையை கேட்டு பார்வையாளர்களும் கலங்கினர்.

ஐ வில் மிஸ் யு
தொடர்ந்து சாண்டியை சிஷ்யா என்று அழைத்த பிக்பாஸ், ஐ வில் மிஸ் யு என்றார். மேலும் நான் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் உங்களை மிஸ் செய்வார்கள் என்றார் பிக்பாஸ்.

அன்பு என்றுமே அநாதையில்லை
மேலும் முகெனை முகென் ஐயா என்று அழைத்த பிக்பாஸ், அன்பு என்றுமே அநாதையில்லை. வெளியே போன பிறகு இந்த உலகமே உங்கள் மேல் அன்பு செலுத்த தயாராக இருக்கிறார்கள். உங்களின் கனவுகளும் நிறைவேற வாழ்த்துகள் என்று கூறி முடித்தார் பிக்பாஸ். இதனை கேட்ட சாண்டியும் முகெனும் கண்ணீர்விட்டு அழுதனர்.

விளையாடிய பிக்பாஸ்
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சகஜமாகவே பழகினார். சாண்டியை சிஷ்யா என்று அழைத்தது, முகெனை முகென் ஐயா என்று அழைத்தது, மைக் விஷயத்தில் சாண்டி மற்றும் லாஸ்லியாவை கலாய்த்தது என பிக்பாஸும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











