நான் தான் ஃபர்ஸ்ட், இல்லை நான் தான் ஃபர்ஸ்ட்: மோதிக் கொள்ளும் யாஷிகா, ஜனனி
Recommended Video

சென்னை: பிக் பாஸ் ஃபினாலே ரேங்க்கால் போட்டியாளர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிவை நெருங்க நெருங்க ரொம்பவே மொக்கையாக உள்ளது. எதற்கெடுத்தாலும் ஐஸ்வர்யாவை கத்தவிட்டால் பார்வையாளர்கள் இம்பிரஸ் ஆகிவிடுவார்கள் என்று யாரோ பிக் பாஸுக்கு தப்பான ஐடியா கொடுத்துள்ளனர்.
சொல்லப் போனால் ஐஸ்வர்யா கோபப்பட்டு கத்தினாலே பார்வையாளர்கள் கடுப்பாகிவிடுகிறார்கள்.
விஜி
நீங்கள் எல்லோரும் என்னை டார்கெட் செய்துள்ளீர்கள் என்று ஐஸ்வர்யா கோபமாக பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வர வர ப்ரொமோ வீடியோக்கள் கூட நிகழ்ச்சி போன்றே சுவாரஸ்யம் இல்லாமல் உள்ளது.
ஜனனி
நான் யாருக்கும் குறைந்தவர் அல்ல என்கிறார் ஜனனி. யாஷிகாவோ ஃபினாலே ரேங்கில் எனக்கு தான் முதலிடம் என்று ஆணித்தரமாக கூறுகிறார். நீங்க ஆசைப்பட்டால் போதுமா, பிக் பாஸ் ஆசைப்பட வேண்டாமா?
ஐஸ்வர்யா
ஃபினாலே ரேங்க் விஷயத்திலும் சொந்த வாழ்க்கையை பற்றி பேசி கண் கலங்குகிறார் ஐஸ்வர்யா. பிக் பாஸ் வீட்டில் யாராவது ஒருத்தர் அழுது கொண்டே இருக்க வேண்டும் என்ற விதிமுறை ஏதாவது உள்ளதா?

அரண்மனைக் கிளி
பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களில் அரண்மனை கிளி சீரியல் விளம்பரம் வேறு. உங்களுக்கு என்ன தான் வேணும் பிக் பாஸ். பார்வையாளர்களை படுத்தி எடுப்பதற்கும் ஒரு அளவே இல்லையா?


Click it and Unblock the Notifications