twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு

    By Siva
    |

    Recommended Video

    bigg boss 2 tamil | full episode 3 | highlights | day 4 | கணவன் மனைவி சண்டையாக மாறுமா பிக் பாஸ் ?

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்க்காத பிரச்சனை தான் வந்துள்ளது.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ஏதாவது பிரச்சனை அதிலும் குறிப்பாக தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

    ப்ரொமோ வீடியோக்களில் பிரச்சனை போன்று காட்டிவிட்டு நிகழ்ச்சியில் மொக்கை போடுகிறார்கள்.

    நித்யா

    நித்யா

    பிக் பாஸே எதிர்பார்த்தாலும் கூட சண்டை போட மாட்டார் போன்று பாலாஜி. அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிந்து வாழும் மனைவி நித்யாவுடன் சமாதானம் ஆகிவிட வேண்டும் என்ற மெகா திட்டத்துடன் உள்ளார். அதனால் அனைவரும் எதிர்பார்க்கும் பிரச்சனை ஏற்படாமலேயே போகலாம். இல்லை சும்மா பெயருக்கு சண்டை போடலாம்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    பஞ்சாபி பெண்ணான யாஷிகா ஆனந்தும், பெங்காளி பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவும் தான் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தமிழில் பேசுகிறார்கள். அவர்களின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

    பிரச்சனை

    பிரச்சனை

    வேறு மாநில பெண்களாக இருந்தாலும் தமிழில் பேசுவதை பாராட்டாமல் கிண்டல் செய்கிறார்களே என்று யாஷிகா ஐஸ்வர்யா தத்தாவிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். எந்த பிரச்சனை வருகிறதோ இல்லையோ மொழி பிரச்சனை வந்துவிட்டது.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்களில் பலர் ஒரே பீட்டர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நித்யா பாலாஜி ரொம்பவே ஓவர். யாஷிகா, ஐஸ்வர்யாவின் முயற்சியை சக போட்டியாளர்கள் பாராட்டாவிட்டாலும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். யார் கிண்டல் செய்தால் என்ன கண்ணுகளா, நீங்கள் தமிழில் பேசுங்க.

    English summary
    Language issue has come up in Bigg Boss house. Housemates who should appreciate Yashika and Aishwarya for speaking in Tamil are making fun of their pronunciation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X