Bigg Boss 3: சுத்தி சுத்தி ஒரு வழியாக எவிக்ஷனுக்கு வந்த கமல்
சென்னை:பிக் பாஸ் பார்வையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த ப்ரொமோ வீடியோ கடைசியாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று வெளியான முதல் 2 ப்ரொமோ வீடியோக்களில் கமல் ஹாஸன் எவிக்ஷன் பற்றியே பேசவில்லை.
இந்நிலையில் 3வது ப்ரொமோ வீடியோவில் தான் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதை பேசியிருக்கிறார் கமல்.
லாஸ்லியா
3வது ப்ரொமோ வீடியோவில் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக கமல் தெரிவித்துள்ளார். (அது எங்களுக்கே தெரியும் கமல் சார்.) அபிராமி, சாக்ஷி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறப் போவதாக கமல் கூறியதும் சிநேக்சி முகத்தில் ஈயாடவில்லை. சாக்ஷி வெளியே செல்ல உள்ள நிலையில் கவின் பயங்கர குஷியாக உள்ளது ப்ரொமோ வீடியோவில் தெரிகிறது.
லாஸ்லியா ஆர்மி
லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக கமல் ஹாஸன் தெரிவித்ததை பார்த்த லாஸ்லியா ஆர்மி மகிழ்ச்சி அடைந்துள்ளது. சாக்ஷி வெளியேற்றப்பட்டுள்ளதால் இனி கவின், லாஸ்லியா காதலை தானே காட்டுவார்கள்.
காதல்
லாஸ்லியா எப்பொழுது கவினுடன் சேர ஆரம்பித்தாரோ அதில் இருந்து தான் அவரின் பெயர் கெட்டுப் போனது. லாஸ்லியாவை மிக்சர் மாமி என்று மட்டும் கூறி வந்த பார்வையாளர்கள் அவர் கவினுடன் சேர ஆரம்பித்ததில் இருந்து கக்கூஸ்லியா என்று திட்டுகிறார்கள். இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, கவினிடம் இருந்து தள்ளியே இருக்கவும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
சார்
லாஸ்லியா வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் முன்பு கால் மேல் கால் போட்டு அதை ஆட்டிக் கொண்டே பேசுகிறார். மேலும் கமல் ஹாஸன் லாஸ்லியாவை அழைத்தால் என்ன சார் என்று கூட கேட்பது இல்லை ஓம் என்று மட்டுமே கூறுகிறார். இது மரியாதை குறைச்சலாக இருப்பதாகவும், லாஸ்லியாவின் தலைக்கனத்தை காட்டுவதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











