சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்சேதுபதி.. FJ, ஆதிரை எலிமினேட்.. தப்பித்த அழுமூஞ்சி சாண்ட்ரா!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அழுமூச்சு சாண்ட்ராவை வெளியேற்ற வேண்டும் என கடந்த வாரம் முழுவதும் இணையவாசிகள் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில். FJ மற்றும் ஆதிரையை ஜோடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரம் தான் பார்க்கும்படியாக இருந்தது, கடந்த வாரத்தில் நடந்த டான்ஸ் மராத்தான், ஆட்டத்தை பார்த்து பாட்டை சொல்வது போன்ற டாஸ்க் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தன. இதில் சாண்ராவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நன்றாக விளையாடினார்கள். சாண்ரா எப்போதுமே அழுதுக்கொண்டே இருந்தார். இதனால், சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விடுங்கப்பா, பார்க்கவே கடுப்பாக இருக்கு என்று அனைவரும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்த போதும், இந்த வாரம் FJ மற்றும் ஆதிரை இருவரும் குறைந்த வாக்குகளை பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 9 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் வியானா, ரம்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து தற்போது நடந்த டபுள் எவிக்ஷனில் FJ மற்றும் ஆதிரை இருவரும் வெளியேறி உள்ளனர். மூன்றாம் வாரத்திலேயே வெளியேறிய ஆதிரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து 21 நாட்கள் வீட்டிற்குள் இருந்து சிறப்பாக விளையாடினார். தனக்கு தவறு என்று பட்டதை தைரியமாக அனைவர் முன்பும் கேட்டார். அதே போல, FJவும் நல்ல போட்டியாளர் யார் என்ன செய்தாலும், தவறு என்று பட்டால் துணிந்து கேள்வி கேட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட நல்ல போட்டியாளர்களை வெளியில் அனுப்பிவிட்டு பிக் பாஸ் வீட்டில், அழுமூச்சுகளை வைத்து இன்னும் ஒரு மாதத்தை எப்படி ஓட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
சாண்ட்ராவின் அட்டகாசம்: கடந்த வாரம் முழுக்க சாண்ட்ரா தனியாக சென்று தூங்குவது, தனியாக சென்று அமர்ந்து கொள்வது, சாப்பிடுவது யாராவது கேள்வி கேட்டால் கத்தி அழுவது என அவர் செய்வதை பார்க்க எரிச்சலாக இருந்தது. இது எல்லாத்தையும் விஜய் சேதுபதி வந்து நல்லா நாலு கேள்வி கேட்பார் என்று பார்த்தால், அழுதுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் சாண்ரா என கேட்டுவிட்டு நிறுத்திக்கொண்டார். சாண்ட்ராவை இந்த வாரம் வெளியேற்றுவார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டோமே. இப்படி எங்கள் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டாரே இந்த பிக் பாஸ் என இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











