'எதியூரப்பா புகழ்' ஷோபா நடிகையாகிறார்... சீரியலில் தலை காட்டுகிறார்!

By Sudha

பெங்களூர்: எதியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது அவரது நிழல் போல திகழ்ந்தவரும், சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவருமாக திகழ்ந்தவருமான ஷோபா கரந்த்லஜே டிவி நடிகையாக புது அவதாரம் பூண்டுள்ளார்.

கன்னட டிவி சீரியல் ஒன்றில் அவர் முதல்வர் வேடத்தில் நடிக்கிறாராம். இதன் மூலம் நடிகையாகவும் அவதாரமெடுத்துள்ளார் ஷோபா.

ஜி கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிஐடி கர்நாடகா தொடரில்தான் முதல்வர் வேடத்தில் நடிக்கிறார் ஷோபா. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

எதியூரப்பாவின் நிழல்

எதியூரப்பாவின் நிழல்

கிட்டத்தட்ட எதியூரப்பாவின் நிழல் என்று அழைக்கப்பட்டவர் ஷோபா. எதியூரப்பாவின் தீவிர சிஷ்யை.

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர்

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர்

ஷோபாவும், சர்ச்சைகளும் இரட்டைப் பிறவிகள் போல. எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை இவரை ரவுண்டு அடித்தபடியே இருக்கும்.

பாஜகவிலிருந்து கர்நாடக ஜனதாவுக்கு

பாஜகவிலிருந்து கர்நாடக ஜனதாவுக்கு

எதியூரப்பா பாஜகவிலிருந்து விலகி தனியாக கர்நாடக ஜனதாக் கட்சியைத் தொடங்கியதும் அதில் இணைந்து செயல்பட்டு வருகிறார் ஷோபா.

நடிகையாகிறார்

நடிகையாகிறார்

இந்த நிலையில் தற்போது நடிக்க வருகிறார் ஷோபா. அதுவும் டிவி சீரியல் ஒன்றில்.

சிஐடி கர்நாடகா

சிஐடி கர்நாடகா

சிஐடி கர்நாடகா என்ற பெயரில் ஒரு மெகா சீரியலை ஜி கன்னட டிவி ஒளிபரப்பவுள்ளது. அதில்தான் நடிக்கப் போகிறார் ஷோபா.

முதல்வர் ஷோபா...

முதல்வர் ஷோபா...

இந்த சீரியிலில் முதல்வர் வேடத்தில் வருகிறாராம் ஷோபா. அவரது நடிப்பும், கெட்டப்பும் ரசிகர்களைக் கவரும் என்று தொடரின் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாகர்பவி ரிசார்ட்டில் வைத்து

நாகர்பவி ரிசார்ட்டில் வைத்து

சமீபத்தில்தான் ஷோபா சம்பந்தப்பட்ட காட்சிகளை பெங்களூர் நாகர்பவியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வைத்துப் படம் பிடித்தனராம்.

எதியூரப்பாவும் நடிப்பாரா...

எதியூரப்பாவும் நடிப்பாரா...

ஷோபா நடிக்க வந்திருப்பதால் அவரது குருவான எதியூரப்பாவும் நடிக்க வருவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசியல்வாதி நடிகர்கள்

அரசியல்வாதி நடிகர்கள்

கர்நாடகத்தில் நடிக்க வந்த அரசியல்வாதிகள் வரிசையில் இதன் மூலம் சேர்ந்துள்ளார் ஷோபா. இதற்கு முன்பு ராமகிருஷ்ண ஹெக்டே ஒரு படத்தில் நடித்திருந்தார். நடிப்பிலிருந்து அம்பரீஷ், குத்து ரம்யா, தாரா என பலர் அரசியலுக்குப் போனார்கள்.

பார்க்கலாம், ஷோபாவை கன்னட ரசிகர்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்று!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X