காதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை

By Siva

Recommended Video

கணவரின் கள்ள தொடர்பு தெரிந்து, டிவி நடிகை தேஜஸ்வினி தற்கொலை- வீடியோ

ஹைதராபாத்: முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் தேஜஸ்வினி(25). அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டாரும் தங்களின் திருமணத்தை ஏற்காததை அடுத்து அவர்கள் துபாய்க்கு சென்றுவிட்டனர். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.

தேஜஸ்வினி

தேஜஸ்வினி

பெற்றோர் ஏற்றுக் கொண்ட பிறகு தேஜஸ்வினியும், பவன் குமாரும் ஆந்திராவுக்கு திரும்பி வந்தனர். பவன் தனது பெற்றோர், மனைவியுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

தற்கொலை

தற்கொலை

பவன் குமாருக்கும், தேஜஸ்வினிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனையாக இருந்துள்ளது. இந்நிலையில் தேஜஸ்வினி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமியார்

மாமியார்

பவன் ஊரில் இல்லாத நேரத்தில் தேஜஸ்வினி தனது படுக்கையறையில் தற்கொலை செய்து கொண்டார். மதியம் சாப்பிட வருமாறு மாமியார் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து பார்த்தபோது தேஜஸ்வினி தூக்கில் பிணமாகத் தொங்கினார்.

விசாரணை

விசாரணை

தேஜஸ்வினி விஷயம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்வி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

தற்கொலை செய்வதற்கு முன்பு தேஜஸ்வினி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பவன் குமாருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக நினைப்பதாக தேஜஸ்வினி கடிதத்தில் தெரிவித்துள்ளார். பவன் தன்னை மனரீதியாக ரொம்பவும் டார்ச்சர் செய்ததாகவும் தேஜஸ்வினி குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X