நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஃப்ரூட்டி காலர்: அழுது சீன் போட்ட லாஸ்லியா

By Siva

சென்னை: ப்ரூட்டி காலர் ஒருவர் லாஸ்லியாவிடம் நறுக்கென்று ஒரு கேள்வி கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியா பலருக்கும் பிடிக்காத போட்டியாளர் ஆகிவிட்டார். ஆனால் காதல் கதையை ஓட்ட ஆள் வேண்டும் என்று லாஸ்லியாவை வைத்துள்ளனர். அந்த கருமம் பிடித்த காதல் கதையால் தான் பார்வையாளர்கள் கோபம் அடைகிறார்கள் என்பது மட்டும் பிக் பாஸுக்கு ஏனோ புரியவில்லை.

இந்நிலையில் லாஸ்லியாவை வைத்து ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

லாஸ்லியா

சேரன் உங்கள் மீது வைத்துள்ள பாசம் உண்மை, நீங்களும் அவர் மீது பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்போ அதை கவின் டிராமா என்று சொன்னபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை என்று பெண் காலர் ஒருவர் லாஸ்லியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு லாஸ்லியா கூறியதாவது, எனக்கு எது உண்மை எது பொய் என்றே தெரியாமல் நானே பெரிய குழப்பத்தில் உள்ளேன். நான் எவ்வளவு உண்மையாக இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். அதை யாருக்கும் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்று கூறி அழுதுள்ளர்.

கோபம்

லாஸ்லியா அளித்த பதிலை பார்த்த பார்வையாளர்களோ நீ முதலில் கிளம்புமா என்கிறார்கள். மற்றவர்களை பற்றி பேசும்போது நன்றாக பேசுகிறீர்கள், உங்களை பற்றி ஏதாவது கேட்டால் மட்டும் நினைவில் இல்லை, குழப்பமாக உள்ளது என்று இன்னும் எத்தனை நாள் தான் ஏமாற்றுவீர்கள் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்பா

அப்பா

லாஸ்லியா செய்த ஒரே தவறு சேரன் பார்க்க தன் அப்பா மாதிரி இருக்கிறார் என்று கூறியது தான். அதற்காக அந்த பெண்ணை இப்படியா பாடாய் படுத்துவது. வார வாரம் லாஸ்லியாவையே டார்ச்சர் செய்கிறார்களே. சேரன் நடிக்கிறார். அதை கமல் உள்பட யாருமே கேட்பது இல்லை. தான் ஒரு இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார் சேரன் என்று லாஸ்லியா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மது

மது நாசமா போனதுக்கு ஒரு ஃப்ரூட்டி காலர் தான் காரணம். அது மறுபடியும் நடக்கப் போகிறது. இதில் யார் மாட்ட போறாங்களோ என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் லாஸ்லியாவின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X