என்னடா நடக்குது இங்கே.. கல்யாணமான "செல்லத்துக்கு" மறுபடியும் கல்யாணமா!

சென்னை : போட்டோ ஷூட் எடுத்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இப்படியா பார்ப்பவர்களுக்கு ஷாக் கொடுப்பீங்க என்று சுந்தரி சீரியல் டீமை ரசிகர்கள் கேட்கிறார்கள்.

கணவனோடு டூயட் பாடிக் கொ ண்டிருந்தவரை, மீண்டும் கல்யாண ஆடையில் வந்து ஒரு நிமிடம் குழம்ப வைத்து விட்டார்கள்.

சுந்தரி சீரியலில் வரும் கருப்பழகி கேப்ரியெல்லா செல்லஸ்தான் திருமண உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

எல்லோருடைய வாழ்விலும் திருமணம் என்பது ஒரு மறக்கமுடியாத நினைவுதான். திருமணத்திற்கு முன்பு வரைக்கும் அந்த நாளுக்காக கனவு கொண்டு இருப்பவர்கள் திருமணம் முடிந்த பிறகு அந்த நாளில் அப்படி இருந்திருக்கலாம் அல்லது இப்படி இருந்திருக்கலாமோ என்று ஏங்கி வருவர். ஆனால் திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திருமண உடையில் ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கும் கேப்ரியெல்லா செல்லஸ் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.

முதல் சீரியல்

முதல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலின் சுந்தரியாக நடித்துக்கொண்டிருக்கும் கேப்ரியெல்லா செல்லஸ் இவர் முதல்முறையாக சீரியலில் தற்போது தான் அறிமுகமாகியிருக்கிறார் .ஆனால் அதற்கு முன்பு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலக்கியிருக்கிறார் .இவருடைய திறமைக்கு இவர்தான் நிகர் .இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் மைம் ஆர்டிஸ்ட் ஆகவும் எழுத்தாளராகவும் ,மாடலாகவும் இருந்து வருகிறார்.

டிக் டாக்கில் புகழ்

டிக் டாக்கில் புகழ்

சீரியலுக்கு முன்பே பல குறும் படங்களிலும் நடித்திருக்கிறார். மலடி ,வெண்பா ,அக்னி ,அனீதி போன்றவற்றிலும் கபாலி ,காஞ்சனா ,ஐரா போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் . சீரியலுக்கு வருவதற்கு முன்பே அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது சீரியலிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். டிக் டாக் செயலி ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் செம ஆக்டிவாக இருந்தார் .

Recommended Video

ஜிகுஜிகு சேலையில் உதட்டை கடித்து துள்ளி ஆடிய லீசா... தத்தளித்த ரசிகர்கள்!
உறவுகளின் முக்கியத்துவம்

உறவுகளின் முக்கியத்துவம்

சமூக விழிப்புணர்வு வீடியோக்களையும் அண்ணன் தங்கச்சி ,அக்கா தம்பி, அப்பா மகள் உறவு பற்றி அடிக்கடி கவிதைகளை எழுதி தன்னுடைய சொந்த குரலில் வெளிப்படுத்தி வந்தார். தற்போதும் கூட பலர் ரீல்ஸ் வீடியோக்களில் தன்னுடைய நடிப்பையும் காமெடியையும் அடிக்கடி வெளிகாட்டி வருகிறார். இந்த நிலையில்தான் சூட்டிங்கை தாண்டியும் ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்.

என்னது மறுபடியுமா

என்னது மறுபடியுமா

அதில் என்னுடைய திருமண உடை என்று திருமண உடையில் தேவதை போல வலம் வருகிறார். இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சியான ரசிகர்கள் சிலர் அக்கா உங்களுக்கு திருமணமா என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது இது என்ன மறுபடியுமா என்று அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X