என் மார்பு என் மகளுக்குடா.. கேப்ரில்லாவின் நெத்தியடி பதில்!

சென்னை: சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சுந்தரி சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை கேப்ரில்லா செலஸ். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், பெண்களை குறித்த தவறான கண்ணோட்டங்களுக்கு நேரடியாக பதிலடி கொடுப்பதில் தயக்கம் காட்டாதவர்

அந்த வகையில் அண்மையில் கேப்ரில்லா செலஸ் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் "தாய்மையை உணர்ந்த தருணம் எது?" என்று கேள்வி எழுப்பியபோது, கேப்ரில்லா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தார். என் மகளுக்கு பால் கொடுக்கும் அந்த தருணம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான அனுபவம். அவள் என்னை பார்த்த அந்த நொடி, அவளின் கண்கள்... அந்த உணர்வு சொல்ல முடியாத ஒன்று. பலர் பெண்களின் உடை குறித்தும், மார்பு பற்றி தவறாக பேசுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் "என் மார்பு என் மகளுக்குடா" என்று உணர்ந்தேன். அது மிகவும் புனிதமான உணர்வு," என்று அவர் உருக்கமாக கூறினார்.

gabriella sellus photos
Photo Credit:

அம்மாவின் அன்பு பிச்சை: தொடர்ந்து அம்மா குறித்து பேசிய கேரில்லா செலஸ், என் வாழ்க்கையில் நான் நெருக்கக்கூடியவர்கள் இரண்டு பேர், ஒன்று என் அம்மா, இன்னொன்று என் மகள். பெற்றவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அனைவரும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் எப்போதும் என் அம்மாவிற்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். இந்த வாழ்க்கை என் அம்மா எனக்கு கொடுத்த அன்பு பிச்சை, இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவங்க தான், அந்த அன்பை அளவிடவே முடியாது என நெருக்கியாக பேசினார்.

பெண் குழந்தை: நடிகை கேப்ரில்லா, தனது காதலரான ஆகாஷ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமா மற்றும் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் சுந்தரி சீரியலில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுத்தார். நடிகை கேப்ரில்லாவிற்கு கடந்த ஆண்டு பெண்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X