Bigg boss 5 …. யார் இந்த கானா இசைவாணி?

சென்னை : கானா இசைவாணி பிக் பாஸ் போட்டியின் முதல் போட்டியாளராக கமல்ஹாசன் அறிவித்தார்.

ஆரம்பமே அசத்தல் என்பது போல இசை மூலம் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கியது.

இசைவாணி தனக்கே உரித்தான கானா பாடலை பாடி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றார்.

இசைவாணி

இசைவாணி

24 வயதான இசைவாணி வட சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் கானா இசைவாணி. அப்பா சிவகுமார் ஹார்மோனியம் வாசிப்பவர். கச்சேரி, கலைநிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

சிறந்து விளங்கினார்

சிறந்து விளங்கினார்

உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைவாணியை தேர்வு செய்து பெருமைப் படுத்தியது BBC. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

ஐ எம் சாரி ஐயப்பா

ஐ எம் சாரி ஐயப்பா

அப்படியான பழம்பெருமை கொண்ட கானாவில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில், 'ஐ எம் சாரி ஐயப்பா நான் உள்ள வந்தா என்னப்பா' என்று ஒலிக்கத்தொடங்கியது பெண்ணின் குரல். எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த அந்த குரல் இசைவானியுடையது.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளரான இசைவாணியை அவரை கமல் அறிமுகம் செய்துவைத்தார். கானா பாடலை ஆண்கள் மட்டுமே பாட வேண்டும் என்ற நிலையை மாற்றியவர் இசைவாணி என்று கமல் அவரை புகழ்ந்தார்.

அப்பாவின் ஆசை

அப்பாவின் ஆசை

இதையடுத்து பேசிய இசைவாணி,என் அப்பா ஒரு ஹார்மோனியக் கலைஞர், என் அப்பாவுக்கு இசை மீது மிகுந்த ஆர்வம். அதனால் எனக்கு இசை வாணி என்று பெயர் வைத்தார். 6 வயதில் இருந்தே எனக்கு இசை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால், அவருடன் பல இரங்கல் நிகழ்ச்சிக்கு சென்று பாடி இருக்கிறேன். மேடைநிகழ்ச்சியில் பாடல் பாடும் போது மைக் எப்போ கிடைக்கும் என்று ஏங்குவேன், ஆனால் கடைசியாத்தான் என்கிட்டே மைக் கொடுப்பாங்க. அந்த நேரம் நான் மிகவும் வருத்தப்பட்டு இருக்கேன். ஆனால், இப்போது என்னை முதலில் பாட சொல்றாங்க மகிழ்ச்சியா இருக்கு. அப்பாவின் ஆசையை நான் தற்போது நிறைவேற்றி இருக்கிறே என்று பெருமையுடன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X