40 வயசு ஆச்சு.. இதுக்கு மேல எப்படி புள்ள பெத்துப்ப.. திவாகரை மோசமாக பேசிய வினோத்

சென்னை: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் குறைந்த வாக்குகளை பெற்ற சுபிக்ஷா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில்,ஆறு போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியே சென்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கின்றனர். இதில், நேற்று வியன்னா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அவர் வந்ததுமே சாண்ட்ரா சும்மா அழுது நாடகமாடுகிறார். அவர் ஒரு நடிப்பு அரங்கி என்பதை சுட்டிக்காட்டி பேசினார். பின் பிக் பாஸ் வீட்டுக்குள் திவாகர், பிரவீன் இருவரும் வந்தனர்.

பிக் பாஸ் சீசன் 9: வீட்டுக்குள் வந்த திவாகர் கானா வினோத்திடம் நான் வெளியில் சென்று பார்த்தேன். நான் வீட்டிற்குள் இருந்த 40 நாட்களாக, நீயும் நானும் இருக்கும் ப்ரோமோ தான் வந்து இருக்கு. அது மட்டுமில்ல, டிஸ்னி பிளாட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்தார்கள் என்றார். உடனே பிக் பாஸ், வெளியில் நடந்ததை சொன்னால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என திவாகருக்கு வார்னிங் கொடுத்தார். அதன் திவாகர் எவ்வளவு வினோத்திடம் பேசுவதற்கு முயற்சி செய்தார். ஆனால், வினோத் அவரிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை.

Bigg Boss tamil Gana Vinoth divagar
Photo Credit:

கானா வினோத்: எப்படியாவது வினோத்திடம் சேர்ந்துவிடலாம் என நினைத்த திவாகர், வினோத்தின் மெத்தைக்கு அருகே படுப்பதற்காக தன்னுடைய பெட்டியை வைத்தார். ஆனால், கானா வினோத், திவாகரிடம் சென்று நீ இங்கே படுக்கக்கூடாது என நேரடியாகவே சொல்லிவிட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, வினோத், தேவையில்லாமல் பேசக்கூடாது ஒழுங்கா வந்தியா, இருந்துவிட்டு போ என்று சொன்னார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை நடந்தது.

எப்படி புள்ள பெத்துப்ப: இது கிடைத்த இன்று வினோத்திற்கும் திவாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அந்த வாக்குவாதத்தின் போது திவாகர், வினோத் உங்களுக்கு இப்போதே 40 வயதாகி விட்டது. ஆனால், எனக்கு அப்படி இல்லை என்று வயதை பற்ற ஏடாகூடமாக பேசினார். இதனால், ஆத்திரமடைந்த கானா வினோத், உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டது. இதற்கு மேல் நீங்க கல்யாணம் செய்து, எப்படி குழந்தைகளை பெற்றுக் கொள்வீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரப்பட்ட திவாகர் ஒருவரை இப்படி கீழ்த்தனமாக விமர்சனம் செய்யக்கூடாது என இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திவாகர் கேமரா முன் நின்று, பிக் பாஸ் டைட்டில் பெறுவதற்கு தகுதியானவர் சபரி, விக்ரம், திவ்யா தான் இவர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள். வினோத்தை டைட்டில் வின்னராக ஆக்கி விடாதீர்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X