Gana Vinoth: பிக்பாஸ் முடிச்சு வெளியே வந்த கானா வினோத்.. யார் சிலைக்கு முத்தம் கொடுக்கிறார்னு பாருங்க
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் டைட்டில் வின்னர் கானா வினோத் தான் என்று பலரும் நினைத்துக் கொண்டும் நம்பிக் கொண்டும் இருந்த காலத்தில், டக்கென பணப்பெட்டியை எடுத்து, ஆட்டத்தில் இருந்து வெளியேறினார் கானா வினோத். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், முதல் நாளில் இருந்து வெளியேறிய நாள் வரை கானா வினோத் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார். இப்படி இருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு ரசிகர்களும் நண்பர்களும் குடும்பத்தினரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கானா வினோத் இந்த சீசனில் பிக்பாஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட பாதி போட்டியாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்கள், ஆனால் கானா வினோத் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தனது கானா பாடல்கள் மூலம் பெரும் பிரபலமடைந்தவர். அப்படி இருக்கையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களை கலாய்த்தது தொடங்கி, மற்ற போட்டியாளர்களுடனான உறவுகளை பேணியது என கானா வினோத் முற்றிலுமாக ஒரு சிறந்த போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

ரசிகர்கள் எண்ணம்: பல நேரங்களில் இந்த மனுஷன் நாம நினைக்கிறதை பேசுகிறாரே என்ற எண்ணத்தை பல நேரங்களில் ஏற்படுத்தி உள்ளார். அவரது கானா பாடல், டைமிங் காமெடிகள், பிக்பாஸ் என்ற ஆட்டத்தை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இந்த சீசனுக்கான கோப்பையை யார் வென்றாலும், டைட்டில் வின்னர் கானா வினோத் தான் என்று கூறும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அம்பேத்கர் சிலை: பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவருக்கு அவரது மனைவி பாக்கியா மிகவும் அட்டகாசமான சர்ப்ரைஸ் வரவேற்பு கொடுத்து, கானா வினோத்தை ஆச்சரியப்படுத்தினார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கையில் அவருக்கு அவரது நண்பர்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் என பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பின் ஒரு பகுதியாக சட்டமேதை புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இது மட்டும் இல்லாமல், அம்பேத்கர் சிலைக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











