Bigg Boss: டைட்டில் வின் பண்ணுவாருன்னு பார்த்தா.. இப்படி பணப்பெட்டியுடன் கிளம்பிட்டாரே.. எத்தனை லட்சம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் சேதுபதி இந்த சீசனை சூப்பராக தொகுத்து வழங்கி சமீபத்தில் டபுள் ரெட் கார்டு கொடுத்து பாரு மற்றும் கம்முவை ஜோடியாக வெளியே அனுப்பினார்.
அவர்கள் இருவருக்கும் எந்தவொரு சம்பளமும் கிடைக்காது என்கிற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. மேலும், முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களிடம் பேசி வரும் நிலையில், அந்த வாய்ப்பும் அவர்களுக்கு கிடையாது.

பிக் பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் பட்டத்தையும் கோப்பையையும் தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் வந்த வரை லாபம் நான் கிளம்புறேன் என பணப்பெட்டியுடன் கம்பி நீட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே சபரி மற்றும் கானா வினோத் இருவரும் திறம்பட விளையாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அரோரா, விக்கல்ஸ் விக்ரம், சாண்ட்ரா மற்றும் திவ்யா கணேஷ் உள்ளிட்ட போட்டியாளர்களில் யார் பணப்பெட்டியை தூக்கப் போவது என ரசிகர்கள் ஆர்வத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், கடைசியில் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.

எத்தனை லட்சம்?: பிக் பாஸ் வீட்டில் இந்த முறை 18 லட்சம் வரும் வரை கொக்கு போல போட்டியாளர்கள் பணத்தை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், கானா வினோத் 18 லட்சம் வந்ததும் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டார் என்கின்றனர். பிக் பாஸ் டைட்டில் வின்னராகவே கானா வினோத் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெட்டியுடன் அவர் வெளியேறியது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
அரோரா பாவம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு கிராண்ட் ஃபினாலே வென்று முதல் நபராக செல்லும் பலரும் டைட்டில் வின்னராக மாட்டார்கள். இந்நிலையில், பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அரோரா கிளம்பி விடுவேன் என முன்னதாக பேசியிருந்த நிலையில், அவருக்கு பதில் கானா வினோத் தூக்கிச் சென்று விட்டார்.
யாரு டைட்டில் வின்னர்?: சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா உள்ளிட்ட போட்டியாளர்கள் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். திவ்யா கணேஷ் மற்றும் சாண்ட்ரா வைல்டு கார்டாக உள்ளே நுழைந்தனர். இந்நிலையில், டைட்டில் வின்னராக சபரி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டிலை வென்றது போல நடக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











