காந்தி ஜெயந்திக்கு சன் டிவியில் பீட்ஸா, ஏழாம் அறிவு
சன் டிவியில் காந்தி ஜெயந்தி தினமாக அக்டோபர் 2ம் தேதி பீட்ஸா, ஏழாம்அறிவு சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
விடுமுறை தினத்தன்று சன் டிவியில் சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பி ரசிகர்களை வீட்டிற்குள்ளேயே கட்டிப்போடுவார்கள்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று சன்டிவியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

ரகளை புரம்
ரகளைபுரம் சிறப்பு நிகழ்ச்சியில் கருணாஸ், கிரேஸ் குழுவினர் பங்கேற்கும் ரகளை கச்சேரி ஒளிபரப்பாகிறது.

ஆல் இன் ஆல் அழகு ராஜா
ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தியின் கச்சேரி நடைபெற உள்ளது.

நையாண்டி
நையாண்டி படக்குழுவினர் படப்பிடிப்பில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா பங்கேற்று தனுஷ், நஸ்ரியா ஆகியோரை பேட்டி காண்கிறார்.

சிறப்புத் திரைப்படங்கள்
காலையில் விஜய் திரிஷா நடித்த கில்லி திரைப்படமும், மதியம் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் நடித்த பீட்ஸா திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. மாலை 6 மணிக்கு சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











