வேந்தர் வீட்டு கல்யாணம் நடத்த வந்த கணேஷ் வெங்கட்ராமன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குப் போய் ஹீரோ, காமெடியன்கள், வில்லன்களாக நடிப்பது ஒரு புறம் இருக்க சினிமாவில் நடித்த நடிகர்கள் டிவியில் ரியாலிட்டி ஷோ நடத்த வருவது அதிகரித்து வருகிறது.
புதிய டிவி சேனலான வேந்தர் டிவியின் ரியாலிட்டி ஷோவான வேந்தர் வீட்டுக் கல்யாணம் நடத்த வந்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், இவன் வேற மாதிரி படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் தான் டிவி ரியாலிட்டி ஷோ நடத்தப் போவதை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு தோறும் இரவு 9 மணிமுதல் 10 மணிவரை ஒளிபரப்பாகிறது வேந்தர் வீட்டுக் கல்யாணம். இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் கலா மாஸ்டர் என்பது முக்கிய அம்சம். கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகளை தயாரித்து இயக்கி வரும் கலா மாஸ்டர் இப்போது வேந்தர் டிவிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
கலா மாஸ்டரின் நெருங்கிய தோழியான குஷ்புவும் வேந்தர் டிவிக்கு சீரியல் தயாரித்து இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











