அக்ஷய் குமாருக்கு பதில் கணேஷ் வெங்கட்ராமன்... ஆவலுடன்!
சென்னை: ஜெயா டிவியில் புதுசா ரியாலிட்டி ஷோ தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள். ஜெயா டிவியில் சக்ஸஸ் ரியாலிட்டி ஷோன்னு பார்த்தா மூணு இருக்கு.
நடிகை சுஹாசினி நடத்திய பேசும்படம்... குஷ்பூ நடத்திய ஜாக்பாட்... நடிகர் பிரிதிவி அதாவது பப்லு நடத்திய சவாலே சமாளி ஷோ...

இதுக்குப் பிறகு ஜெயா டிவி அதிகமா ரியாலிட்டி ஷோ பக்கம் கவனம் செலுத்தலை. இப்போ புதுசா ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்கிற நிகழ்ச்சியைத் துவங்க இருக்கிறது.
இதைத் தொகுத்து வழங்குபவர் பிக்பாஸ் முதல் சீசனில் முன்னணி போட்டியாளராக இருந்து வந்த கணேஷ் வேங்கடராமன்தான்.
சில வருஷங்களுக்கு முன்னால் சன் டிவியில் தில் தில் தில் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதை இந்தியில் அக்ஷய்குமார் நடத்தியதை தமிழில் மொழியாக்கம் செய்து சன் டிவியில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் ஒளி பரப்பினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் நினைச்சு பார்க்க முடியாத வீர தீர சாகச நிகழ்ச்சிகளை ரொம்ப கஷ்டப்பட்டு செய்வார்கள். இளம் பெண்களுக்கு இது பெரும் சவாலான நிகழ்ச்சியாகத்தான் இருந்தது.
இப்போது இது போல பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜெயா தொலைக்காட்சியில் 12 பெண்களை மையப்படுத்தி ஆக்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
12 பெண்கள் கலந்துகொள்ளும் இந்த போட்டியை கணேஷ் வெங்கடராமன் தொகுத்து வழங்க உள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











