தில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்
Recommended Video

சென்னை: துணிச்சல் இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளட்டும் பார்ப்போம் என்று காயத்ரி ரகுராம் நடிகை ஸ்ரீ ப்ரியாவுக்கு சவால் விட்டுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸனின் மய்யம் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் நடிகை ஸ்ரீ ப்ரியா. அவர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தினமும் கமெண்ட் போட்டார்.
இந்த காரணத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவரும், நடிகர் சதீஷும் சென்று கமலுடன் பேசினார்கள்.
ஸ்ரீப்ரியா
ஸ்ரீ ப்ரியா தான் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தபோது சைகை காண்பித்து கமலிடம் உங்களிடம் ஹேர் விஷயம் பற்றி கேட்கச் சொன்னார் என்று ஒருவர் ட்வீட்டியதை பார்த்த காயத்ரிக்கு பழைய விஷயம் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது.
ஆன்ட்டி
ஸ்ரீப்ரியாவை நான் அக்கா என்று அழைக்க அவர் என் சகோதரி இல்லை. என் ஆன்ட்டி இல்லை, தோழி இல்லை, நல விரும்பி இல்லை, பாஸோ, சக ஊழியரோ இல்லை. அவர் எனக்கு சோறு போடவில்லை. அவர் என் அப்பா, அம்மாவுடன் பணியாற்றியிருக்கலாம். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலாய்ப்பவர்களில் ஒருவர் அவ்வளவு தான் என்கிறார் காயத்ரி.
ஏன்?
கெட்ட வார்த்தை என்பதால் அவருக்கு ஹேர் என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் இன்னும் அதை வைத்துள்ளார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் காயத்ரி.
சவால்
ஸ்ரீப்ரியாவை துணிச்சல் இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காயத்ரி ரகுராம் சவால் விட்டுள்ளார். இதற்கு ஸ்ரீப்ரியா என்ன சொல்லப் போகிறாரோ?


Click it and Unblock the Notifications











