பார்ரா, மகத்துக்கு யார் அட்வைஸ் பண்ணியிருக்கார்னு: நம்ம லெஜன்ட் காயத்ரி

By Siva

Recommended Video

மகத் நல்லவர், நன்றாக பழகுவார்- காயத்ரி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 போட்டியாளர் மகத்துக்கு முன்னாள் போட்டியாளரான காயத்ரி ரகுராம் அறிவுரை வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் முதல் சீசனை பார்த்தவர்கள் காயத்ரி ரகுராமை கழுவிக் கழுவி ஊத்தினார்கள். பிக் பாஸ் 2வது சீசனை பார்த்த பிறகு காயத்ரி ரகுராம் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் மக்கள் மற்றும் கமலிடம் திட்டு வாங்கிய மகத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

காயத்ரி

பிக் பாஸ் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமே மகத். உங்களின் உண்மையான நண்பர்கள் வெளியே உள்ளனர். உங்களுக்கு உண்மை எதுவென்று தெரியவில்லை. உங்களின் திறமையும், எதிர்காலமும் உங்கள் கையில் உள்ளது. அதை நீங்கள் வெளியே பல வழிகளில் வெளிப்படுத்தலாம். பிக் பாஸ் ஒரு வாய்ப்பு மட்டுமே. அது தவறாக போனால் இரண்டாவது வாய்ப்பு உண்டு. இது முடிவு அல்ல என்று காயத்ரி ரகுராம் ட்வீட்டியுள்ளார்.

விமர்சனம்

பார்வையாளர்கள் மோசமாக பேசுவதால் நாங்கள் வீக்காகி விட மாட்டோம். மேலும் அதனால் எங்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்கிறார் காயத்ரி. பிக் பாஸ் 2 துவங்கும் வரை காயத்ரியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் அதை எல்லாம் மனதில் வைத்து பேசுகிறார்.

ரசிகர்கள்

எங்களால் உங்களை வீக்காக்க முடியாதா? சினிமா துறையில் ரசிகர்கள் இல்லாமல் இருப்பவர் யார்? உங்களை ராணியாக்கவும், ஒன்றும் இல்லாமல் ஆக்கவும் எங்களால் முடியும். உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்வது நாங்களே. எங்கள் முன்பு நீங்கள் பூஜ்ஜியம். நாங்கள் மகத்தை மென்டல் என்று சொல்லவில்லை. அவர் நடத்தை கெட்டவர் என்று ஒருவர் கமெண்ட் போட்டார்.

நடனம்

எனக்கு திறமை இல்லை என்றாகிவிடாது. எனக்கு கடவுள் அளித்த திறமை உள்ளது. என்னால் எங்கும் பிழைக்க முடியும். நான் ஆடியன்ஸுக்காக நடிப்பதோ, கோரியோகிராப் செய்வதோ இல்லை. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன். அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம் என்று நெட்டிசனின் கமெண்ட்டுக்கு பதில் அளித்துள்ளார் காயத்ரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X