தனுஷ், சிவகார்த்திக்கேயனுடன் ஜோடி போட ஆசை: டிவி நடிகை ஜெனிப்ரியா

By Mayura Akilan

சினிமாவில் அறிமுகமாகி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வந்த ஜெனிப்ரியா மீண்டும் சினிமாவில் முழுகவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஜெனி ப்ரியா பாக்யராஜ் அசிஸ்டெண்ட் ரஞ்சித் மணிகண்டன் இயக்கும் ‘அதிமேதாவிகள்' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘உத்தம திருடன்' படத்தில் சென்ட்ராயன் ஜோடியாகவும், ‘வாலு' படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகப் பள்ளி மாணவியாக நடிக்கிறாராம்.

‘காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை' என்ற படத்தில் நாலு புது முகங்கள் நடிக்கிறார்கள். இதில் கதாநாயகியாக நடிக்கிறார் ஜெனிப்ரியா.

துள்ளல் அறிமுகம்

துள்ளல் அறிமுகம்

பிரவீன் காந்தி இயக்கிய ‘துள்ளல்' படத்தில்தான் அறிமுகமான ஜெனிப்ரியா, சின்னி ஜெயந்தோட ‘நீயே என் காதலி' படத்தில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரை

சின்னத்திரை

‘புதிய பார்வை' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெனிப்ரியா ஜெயா, கலைஞர், சன் டி.வி.ன்னு ஒரு ரவுண்டு வந்துவிட்டார். நிகழ்ச்சித் தொகுப்பாளர், சீரியல் என எதையும் விட்டு வைக்காமல் நடித்துள்ளார்.

கிளாமருக்கு நோ

கிளாமருக்கு நோ

சின்னத் திரையில் இருந்ததால் பெரிய திரையில் நிறைய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். இனிமேல் என் கவனம் முழுக்க சினிமால வைக்கப்போறேன். சினிமால கிடைச்சிருக்க இடத்தைத் தக்க வைச்சுக்க தேவையில்லாத கிளாமர் பண்ண மாட்டேன். சின்னத் திரையில கிடைச்ச டீஸண்டான பெயரை சினிமால கெடுத்துக்க விரும்பவில்லை என்கிறார்.

விஜய் அண்ணன்

விஜய் அண்ணன்

பருத்தி வீரனில் ப்ரியா மணி செய்த ரோல் போல செய்ய ஆசைதான். எல்லாருமே விஜய்கூட ஜோடியாக நடிக்க ஆசைப்படுவாங்க. ஆனால், எனக்கு அவருக்குத் தங்கையாக நடிக்கணும்னு ஆசை. அவரைப் பார்க்குறப்ப அண்ணன் ஃபீலிங் வருது.

தனுஷ் ஜோடியாக

தனுஷ் ஜோடியாக

தனுஷ், சசிகுமார், சிவகார்த்திகேயன் கூட ஜோடியாக நடிக்க ஆசையாக இருக்கு. இவர்கள் மூன்று பேரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X