Aarundhathi serial: மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு அருந்ததி அட்டகாசம்!

சென்னை:சன் டிவியின் அருந்ததி சீரியலில் சண்முகத்துக்குள் புகுந்த அருந்ததி ஆவி, அப்பப்போ பயமுறுத்துது.

முதலிரவில் தலை நிறைய மல்லிகைப் பூ, நெத்தியில் பெரிய பொட்டு, சிவப்பு நிற பட்டுச்சேலை, கை நிறைய வளையல்,நகைகள் என்று கலக்கி தெய்வானையை பயமுறுத்திய சண்முகம். விடிந்ததும் கனவுதான்னு சொல்லிட்டான்.

இன்னிக்கு பொம்பளை மாதிரி உடம்பில் துண்டு கட்டிக்கிட்டு குளிக்க ஆசை வந்துருச்சு.

புது காப்பு

புது காப்பு

சண்முகம் சாப்பிட உட்காருகையில், இருங்க உங்களுக்கு இந்த பழைய காப்பு வேணாம், புது காப்பு போட்டு விடறேன்னு சொல்லி, அவன் கையைப் பிடிக்கறா தெய்வானை.காப்பு கையில் பட்டதும் சண்முகத்துக்கு உடம்பெல்லாம் எரிச்சல். அதே எரிச்சலில் மனைவியிடம் கடுப்பாகி எரிஞ்சு விழறான். பயந்துடறா தெய்வானை. சாப்பிடாம கோவமா எழுந்து போயிடறான். ஈஸ்வரி அம்மா தெய்வானையை சமாதானப் படுத்தறாங்க.

மஞ்சள் குளிச்சு

மஞ்சள் குளிச்சு

ரூமுக்கு போன சண்முகம் நேரே துண்டுடன் பாத் ரூமுக்கு போறான். துண்டை முண்டு போல கட்டிக்கிட்டு, கை நிறைய மஞ்சள் எடுத்து முகத்தில் ஆசை ஆசையாய் பூசிக் குளிச்சு சந்தோஷ படறான். உடம்பெல்லாம் மஞ்சள் பூசிக் குளிச்சு மகிழறான். பிறகு சாதாரணமா வந்து தெய்வானைகிட்ட சாரி கேட்கிறான்.எதுக்குன்னு கேட்டப்போ, காப்பு போட வரும்போது உன்னை கோச்சுகிட்டேனே அதுக்குத்தான்னு சொல்றான்.தெய்வானைக்கு குழப்பம்.

சண்முகம் காப்பு

சண்முகம் காப்பு

தெய்வானை வச்சிருந்த காப்புக்கு பக்கத்தில் தன்னுடைய பழைய காப்பை கழட்டி வச்சிருந்த சண்முகம் அதை எடுக்கப் போக,தெய்வானை முன்பே சண்முகத்துக்கு என்னென்னவோ நடக்குது. இதில் சந்தேகம் வருது தெய்வானைக்கு. அதோடு, முருகனிடம் அவள் வேண்டிக்கொண்டு இருக்க சண்முகத்தின் காப்பு கறுப்பாகுது. அப்போ தீய சக்தி சண்முகத்தின் உடம்பில்தான் புகுந்து இருக்கான்னு அவ கேட்டுகிட்டு இருக்கும்போதே எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பேப்பர் அவ கையில் தொங்குது. அதிலென்ன இருக்குன்னு பார்த்தால்தான் தெரியும்.

தொட்டே பாதி

தொட்டே பாதி

நம்பூதிரி ரஞ்சனி அம்மா உனக்கு புத்தி சரியில்லையா...தெய்வானை காப்பு மிகவும் தெய்வ சக்தி வாய்ந்ததாச்சே..அதை போயி நீ தொடலாமா..உன் சக்தி பாதி போயிருச்சுன்னு சொல்றாங்க.இல்லை அந்த குடும்பத்து ஆண்களை நான் அழிச்சே ஆகணும் ...திரும்ப எனக்கு முழு சக்தியையும் குடுன்னு கேட்கறான் சண்முகம். ரஞ்சனி அம்மா காளி யாகம் நடத்தி சண்முகத்துக்கு சக்தியைத் தர்றாங்க. அதே சமயம் மறுபடியும் இதே மாதிரி நடந்துச்சு உன் முழு சக்தியும் போயிரும்னு எச்சரிக்கறாங்க. வரும் ஏழு நாட்ளில் ஒவொருவரையும் ஈஸ்வரி அம்மா புருஷனை கொன்னை மாதிரி வதம் செய்வேன்னு சிரிக்கிறான் சண்முகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X