Eeramana rojave serial:வரதட்சணை வாங்கினா இப்படியா தோணுது... நல்ல மெசேஜா இருக்கே!

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் இன்னிக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லி இருக்காங்க. வரதட்சணை வாங்கிட்டு ஒரு ஆண் படும் அவஸ்தையை அவனே விவரிக்கிறான்.

ஈரமான ரோஜாவே சீரியலில் அக்கா தங்கை ரெண்டு பேரும், அண்ணன் தம்பியையே கல்யாணம் செய்துக்க வேண்டிய கட்டாயம்.அக்காவுக்கு ஒரு சந்தர்ப்பம், தங்கைக்கு ஒரு சந்தர்ப்பமென்று ஒரே சோதனையிலிந்த கல்யாணம்நடக்குது.

இந்த கல்யாணம் ரெண்டு ஜோடிகளில் நால்வருக்குமே கட்டாய கல்யாணம் போலத்தான் நடக்குது. ஆனால்,ரெண்டு குடும்பமும் உறவுகார குடும்பம். அம்மா சீர், பணம், நகைன்னு வாங்கினது எனக்கு பிடிக்கலைம்மான்னு புகழ் சொல்றான்

வெற்றி மலர்

வெற்றி மலர்

முதளில் வெற்றி மலர் ரெண்டு பேருக்கும் எதிர்பாராத விதமா கல்யாணம் நடக்குது. ரெண்டு பேருக்கும் அப்போது மனசு ஒப்பலைன்னாலும் இப்போ கொஞ்சம் நெருங்கி வந்து வாழ சூழ்நிலைகள் சாதகமா அமையுது. அதுக்குள்ள இந்த கல்யாணத்தை விரும்பாத வெற்றியின் அம்மா சீர் செனத்தின்னு கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிக்கறாங்க.

சீர் வரிசை

சீர் வரிசை

வெற்றியின் அம்மா, அக்கா சீர் செனத்தியா என்ன கேட்டாங்களோ அவங்க கேட்டதை மலரின் அப்பா செய்துடறார். இந்த நேரத்துலதான் மலரின் தங்கச்சி கல்யாணம் நடக்க பல ஏற்பாடுகள் நடக்குது. மாப்பிள்ளை அசலில் பார்த்து பேசி முடிக்கறாங்க.கல்யாண நாளும் வந்துருது. மலரின் தங்கச்சி பேரு அகிலா.

அகிலா புகழ்

அகிலா புகழ்

அகிலாவின் உடை மாற்றும் வீடியோவை காமிச்சு இந்த கல்யாணத்தை விரோதிங்க நிறுத்திடறாங்க. மணமகனா மலரின் புருஷன் வெற்றி தனது தம்பியை அகிலாவுக்கு மாப்பிள்ளையாக்கி உட்கார வைக்கிறான்.இதிலும், வெற்றி, புகழ் அம்மாவுக்கு இஷடமில்லை. அவசர கல்யாணம், மாப்பிள்ளை மாறியது என்று அகிலாவுக்கு சீர் செய்ய அப்போது அவர்களால் முடியவில்லை.

புகழ் அகிலா

புகழ் அகிலா

அகிலாவை புகழால் ஏத்துக்க முடியலை.போதாக் குறைக்கு அகிலாவை பத்தி புகழின் அம்மாவும், அக்காவும் கண்டபடி பேசி அவனைத் தூண்டி விடறாங்க. அவன் தினமும் குடிச்சுட்டு வந்து அகிலாவை டார்ச்சர் பண்றான். இந்த நேரத்தில்தான் இரண்டு பெண்கள், மாப்பிள்ளையை மறு வீட்டுக்கு அழைக்கறாங்க. வரும் போது சீர் செனத்தியோட வரணும்னு அம்மா கண்டிஷன் போட்டு பெண் வீட்டாரை அனுப்பி வைக்கறாங்க.

புகழுக்கு நினைப்பு

புகழுக்கு நினைப்பு

அகிலா மாப்பிள்ளைக்கு மட்டும்தான் இப்போ சீர் செய்யணும். பெண் வீட்டார் புகழுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம், மோதிரம், கழுத்துக்கு செயின், பிரேஸ்லெட் எல்லாம் போட்டு அனுப்பி வைக்கறாங்க.எல்லாத்தையும் செக் பண்ணி பார்த்த அம்மாகிட்ட புகழ் சொல்றான்.

சிலேட்டை தொங்கவிட்டு

சிலேட்டை தொங்கவிட்டு

அதாவது என்னன்னா,அம்மா சீர், பணம், நகைன்னு வாங்கினது எனக்கு பிடிக்கலைம்மான்னு சொல்றான்.என்ன புகழ் சொல்றேன்னு அம்மா கேட்க, இது எதுவும் வாங்காத வரைக்கும் எனக்குள்ளஒரு கெத்து இருந்துச்சும்மா. இப்போ எப்படி இருக்கு தெரியுமா...நடு ரோட்டில் என் கழுத்தில் சிலேட்டை தொங்கவிட்டு, அதில் இந்த பையன் 5 லட்சம், மற்றும் நகைகளுக்கு விலை போனவன்னு எழுதி எல்லோரும் என்னை கேலியா பார்க்கற மாதிரி இருக்கும்மான்னு சொல்றான்.

நல்ல ஃபீலிங்... நல்ல மெசேஜும் கூட!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X