கஸ்தூரி அக்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்லாமலேயே இருந்திருக்கலாம்
சென்னை: கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாம்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு நடிகை கஸ்தூரி என்றால் ரசிகர்கள் மத்தியில் கெத்தாக இருந்தது. அவர் நாட்டு நடப்பு முதல் சினிமா, பிக் பாஸ் வரை பல விஷயங்கள் குறித்து துணிச்சலாக கருத்து தெரிவித்து ட்வீட் போட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நான் அவரின் மனதை மாற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தனர்.

கஸ்தூரி
கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பமாக இருந்தது. கஸ்தூரி வந்தால் சக போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுப்பார், கமல் ஹாஸனையே வந்து பார் என்பார் என்று ஏதேதோ பெரிதாக நினைத்தார்கள் பார்வையாளர்கள். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு நேர் எதிராக நடந்துவிட்டது.

கலாய்
கஸ்தூரி சென்ற கையோடு வனிதாவும் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்ததால் எல்லாம் சொதப்பிவிட்டது. வனிதா செய்யும் வேலைகளால் கஸ்தூரி டம்மி பீஸாகிவிட்டார். மேலும் சக போட்டியாளர்கள் சேர்ந்து கொண்டு கஸ்தூரியை கலாய்த்து அசிங்கப்படுத்தினார்கள். கஸ்தூரி ருத்ரதாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்த்தால் அவர் அமைதியாக இருந்தார்.

பாவம்
கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற வேகத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை வெளியேற்றியது நல்லது தான். இல்லை என்றால் அவரை இன்னும் சில வாரங்களுக்கு பாடாய் படுத்துவார்கள். கஸ்தூரி அக்கா பாவம். ட்விட்டரில் இருந்த கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டில் காணவில்லை. அவரின் கெத்து எல்லாம் போச்சு என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணியுள்ளனர்.

பிக் பாஸ்
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களுக்கு கஸ்தூரி அக்கா எவ்வளவோ மேலானவர். அவர் இந்த நிகழ்ச்சிக்கு போகாமலேயே இருந்திருக்கலாம். போய், அனைவர் முன்பும் காமெடி பீஸானது தான் மிச்சம். இனி ட்விட்டரில் அவர் என்ன சொன்னாலும் மரணமாக கலாய்ப்பார்களே. வனிதாவை எதிர்க்க முடியாத நீங்கள் எல்லாம் எங்கள் அண்ணனை பற்றி பேச வேண்டாம் என்று ஒரு கோஷ்டி கிளம்புமே என்பது தான் ரசிகர்களின் கவலை.


Click it and Unblock the Notifications











