எல்லோரும் உன் காலில் விழுந்துக்கிடக்கணும்னு பார்க்கிறியா? பாக்கியாவிடம் மல்லுக்கு நிற்கும் கோபி!

சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் சேனலின் முக்கியமான தொடராக மாறியுள்ளது.

கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கதாபாத்திரங்களை மையமாக கொண்டு இந்த தொடர் தற்போது வெளியாகி வருகிறது.

இந்தத் தொடரில் கோபி இருவேறு சாப்டர்களை ஒரே நேரத்தில் மெயின்டெய்ன் செய்துவந்தது, ஒருகட்டத்தில் வெளிப்பட்ட நிலையில் தற்போது இருதரப்பிலும் இடிப்பட்டு வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிந்தைய காதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த தொடர் கையில் எடுத்துள்ளது.

காதலை புதுப்பித்த கோபி

காதலை புதுப்பித்த கோபி

திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அதில் முதல் மகனுக்கு திருமணமாகிய நிலையில், தன்னுடைய கல்லூரிக்கால தோழியை சந்திக்கும் கோபி, தன்னுடைய காதலை மீண்டும் தொடர்கிறார். இருதரப்பிலும் தன்னுடைய விஷயம் வெளியில் தெரியாமல் மெயின்டெயின் செய்துவரும் கோபி, அதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை செய்கிறார்.

 வெளிப்படும் காதல்

வெளிப்படும் காதல்

தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவரது குட்டு, காதலி ராதிகாவின் கணவனால் வெளிப்படுகிறது. இதையடுத்து பல இக்கட்டுக்களை சந்தித்து வருகிறார் கோபி. ஒருபுறம் ராதிகா, அவரைவிட்டு பிரிந்து மும்பைக்கு செல்ல முடிவெடுத்த நிலையில், மனைவி பாக்கியாவும் தன்னுடைய கணவன் கோபியின் துரோகத்தை ஏற்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

நிலைகுலைந்த குடும்பம்

நிலைகுலைந்த குடும்பம்

அவரது இந்த செயல்பாட்டால் குடும்பமே நிலைகுலைகிறது. மகள் இனியா தன்னுடைய தாயை நினைத்து, தந்தையின் துரோகத்தை நினைத்து தொடர்ந்து கண்ணீர் சிந்துகிறாள். நடந்த அனைத்திற்கும் தன்னுடைய தந்தைதான் காரணம் என்பதை அடிக்கடி கோபத்துடன் சுட்டிக் காட்டுகிறாள். தன்னுடைய தந்தையை வெறுக்கிறாள்.

கதறியழும் இனியா

கதறியழும் இனியா

தொடர்ந்து சாப்பாடுகூட சாப்பிடாமல் தன்னுடைய தாயை நினைத்து கதறும் அவளை சமாதானப்படுத்த முயலும் அவளுடைய தாத்தா மற்றும் பாட்டியும் இதனால் பரிதவிக்கின்றனர். பாக்கியாவை வீட்டிற்கு அழைத்துவரும் முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்தும் பலன் எதுவும் இல்லாமல் பாக்கியா தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியுடன் இருக்கிறார்.

கோபிக்கு அறிவுரை

கோபிக்கு அறிவுரை

குடும்பமே வந்து அழைத்தபோதிலும் வீட்டிற்கு வராத பாக்கியாவின் உறுதியை சுட்டிக்காட்டி, அவளது காலடியில் குடும்பமே விழுந்துக் கிடக்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்றும் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பாக்கியா கோபத்துடன் அவரை பார்ப்பதாக எபிசோட் முடிந்துள்ளது.

 பாக்கியாவிடம் கோபம்

பாக்கியாவிடம் கோபம்

குடும்பமே வந்து அழைத்தபோதிலும் வீட்டிற்கு வராத பாக்கியாவின் உறுதியை சுட்டிக்காட்டி, அவளது காலடியில் குடும்பமே விழுந்துக் கிடக்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்றும் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பாக்கியா கோபத்துடன் அவரை பார்ப்பதாக எபிசோட் முடிந்துள்ளது.

 பாக்கியாவிடம் மல்லுக்கட்டும் கோபி

பாக்கியாவிடம் மல்லுக்கட்டும் கோபி

இதையடுத்து பாக்கியாவை சந்திக்கும் கோபி, நடந்த தவறுக்கு தான்தான் காரணம் என்று கூறுகிறார். ஆனால், இனிமைவை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை என்றும் அவளுக்காக வீட்டிற்கு வரும்படியும் கூறுகிறார். தான் பழைய வாழ்க்கையை தொடர மாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறார்.

ராதிகாவை ரகசியமாக சந்திக்கும் கோபி

ராதிகாவை ரகசியமாக சந்திக்கும் கோபி

முன்னதாக கோபி ராதிகாவை ரகசியமாக சந்தித்து, அவர் மும்பைக்கு போக வேண்டாம் என்றும் விருப்பமில்லாத வாழ்க்கையை தான் வாழ்ந்ததாகவும் ராதிகாவுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். தனக்காக ராதிகா எங்கும் செல்லாமல் தன்னுடைய வாழ முற்பட வேண்டும் என்றும் கேட்கிறார். ஆனால் அவரை கோபத்துடன் பேசும் ராதிகா அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X