Kalyana Veedu Serial: கண்ணீர் பெருகியதே....கோபியின் செயல்!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கோபியின் ரீ என்ட்ரி அதற்குப் பிறகான அவரது செயல்கள் பார்க்கும் பெண்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து உள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த போது, பதறாத இதயங்கள் இல்லை. அனால், அவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கலாம், அந்த தண்டனை கொடுக்கலாம் என்றுதான் பேச முடிந்ததே தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.
கல்யாண வீடு சீரியலில் ரோஜாவுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்குது.இதை இயக்குநர் திருமுருகன் எப்படி கையாளப் போகிறாரோ என்று நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது.

ரோஜா ராஜா
அருகில் மணப் பெண்ணாக ரோஜாவைக் கண்டதும் ஆடிப்போன ராஜா,உடனடியாக எழுந்துக்கறான். கத்தி கலாட்டா பண்ண, கோபியின் தங்கச்சிகளிடம் அடி வாங்குறான். ரோஜாவும் அவனை அடித்து துவைக்கிறாள். அப்போதுதான் ராஜாவுக்கு போன் வருது.

செல்வம் போனில்
போனை ஸ்பீக்கரில் போடுன்னு சொல்லி ரோஜா மிரட்ட,ஸ்பீக்கரில் போட்டு பேசறான் ராஜா.என்ன முதலாளி எப்படி இருக்கீங்கன்னு கேட்கறான் செல்வம். டேய் நீ எப்படிடா உயிரோட இருக்கே..என் ஆளுங்க எங்கேடான்னு கேட்கறான்.என்ன முதலாளி உங்க ஆளுங்க சப்பையா மயங்கிக் கிடக்காங்கன்னு சொல்றான்.

கல்யாணம் எப்படி
ஆமாம் முதலாளி அங்கே கல்யாணம் எப்படி நடக்குதுன்னு கேட்க இவன் பேசாமல் இருக்கான்.எப்படி நடக்கும்? பொண்ணுதான் எங்ககிட்ட இருக்குதேன்னு சொல்ல எல்லாரும் பதற்றம் ஆகறாங்க. நாங்க அனுபவிச்சுட்டு அனுப்பி வைக்கறோம் .நீங்க அனுபவிங்க முதலாளின்னு சொல்ல, காட்டுக்குள்ளேதான் இருப்பாங்க வாங்கன்னு ஓடறான் ராஜா.

பெண்கள் எல்லாரும்
பதறியபடி தலை தெறிக்க எல்லாரும் சூர்யாவைத் தேடி ஓடறாங்க. ரோஜா பதறி ஓடுவதும்,மற்ற பெண்களும் சூர்யாவை காப்பாத்திட வேண்டும் என்று பதறி ஓடி வருவதும் நிஜம் என்பது போல நம்மை உணர வைத்து கண்ணில் நீரை வரவழைக்குது. சூர்யாவை கயவன் நெருங்கும்போது பதற்றம் நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.

கோபி தொரட்டி
சட்டை பேண்டை ஒரு கயவன் கழட்டும் அந்த காட்சியை ஒரு பெண் பார்ப்பது என்பது எத்தனை அருவெறுப்பானதுன்னு இயக்குநர் உணர்த்தி இருக்கார்.அருவெறுப்பில் சூர்யா கண்களை மூடி அழ, எங்கிருந்தோ ஒரு தொரட்டி செல்வத்தின் கழுத்தில் வந்து நிக்குது.பார்த்தால் கோபி. எல்லார் கண்களிலும் கண்ணீர்.

தண்டனை இதுதான்
உனக்கு அப்பவே ஒரு வாய்ப்பு திருந்த குடுத்தேன்.நீ திருந்தலை.இந்த தொரட்டி காயையும் இருக்கும்னு சொல்லி அவனது அந்த உறுப்பை வெட்டிடறார் கோபி. மத்தவங்களை மயக்கமாக்கி,அந்த இடத்தில மண்ணெண்ணெய் ஊற்றி ரோஜாதான் இந்த தண்டனை குடுக்க தகுதியானவள்னு சொல்லி தீப் பெட்டியை கோபி.ரோஜா கையில் குடுக்கறான். ரோஜா கோவத்தோடு கொளுத்திப் போடறா.
இதுக்கு மேல இந்த வழக்கு எப்படி போகுதுன்னும் கண்டிப்பா கவனிக்கனும். இது ஒரு படத்தில் விவேக் செய்த நகைச்சுவைதான்.காலத்துக்கு ஏற்பஎப்படி உதவுது பாருங்க....


Click it and Unblock the Notifications











