Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Kalyana veedu serial: ஆஹா.. கோபி தங்கைகளை பார்த்து ரவுடிங்க என்னா ஓட்டம்!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் அதிவேகத்துல போயிகிட்டு இருக்கு. அதே சமயம் எதிர்பாராத திருப்பங்கள், பார்த்திராத வன்முறைகள்னு சீரியலைப் பார்க்க திக் திக்குன்னும் இருக்கு.
இயக்குனர் திருமுருகனுக்கு என்று ஒரு ஸ்டைலும் கிடையாது.மெட்டி ஒலி சீரியலைப் பார்த்து, இவருக்கு குடும்ப சீரியல்தான் கைவந்த கலைன்னு நினைச்சோம்.
இதுக்கு நடுவுல எம்டன் மகன் உள்ளிட்ட இரண்டு படங்கள் குடுத்துட்டு மீண்டும் சின்னத் திரைக்கு நாதஸ்வரம் என்று ஒரு குடும்ப சீரியலோடுதான் வந்தார்.
Rajinikanth: ரஜினிக்கு இப்ப வந்த ஆசையைப் பாருங்களேன்!
புதுமை ஒன்றாவது
மெட்டி ஒலி காலத்தில் இருந்தே தனது சீரியல்களில் எதாவது புதுமைகள் செய்வதில் வல்லவர் திருமுருகன். இடைவெளி இல்லாமல் சீரியல்களை ஒளிபரப்புவது, காரைக்குடியில் இருந்து உலகம் எங்கும் நாதஸ்வரம் சீரியலை லைவ் டெலிகாஸ்ட் பண்ணியது என்று சொல்லலாம். இதில் கின்னஸ் ரெக்கார்டு கூட வாங்கி இருக்கிறது நாதஸ்வரம் சீரியல் குழு.
என் வழி
எனக்குன்னு ஒரு பாணி அமைச்சுக்கிட்டு சீரியல் எடுப்பது என் பழக்கமில்லை. எங்கிருந்தும் எதிலும் நமக்கு கதைகள், காட்சிகள் கிடைக்கலாம். கற்பனைகள் பிறக்கலாம். இதற்கு அணை போடுவது போல ஒரு பாணி, ஸ்டைல் என்பதில் சிக்கிவிடக் கூடாது. படம், சீரியல் எதுவானாலும், எனக்கு எப்படி வருமோ அப்படித்தான் அதை மக்களுக்கு சேர்க்கிறேன். எனக்கென்று எந்தவித பாணிக்குள்ளும் நான் அடங்விட நினைப்பதில்லை என்று கூறுகிறார் திருமுருகன்.
வீடு கல்யாணம்
கல்யாண வீடு என்பதை சீரியல் பெயராகவும் எடுத்துக்கலாம்.வீட்டை கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் என்று இருவித கஷ்டங்களையும் ஒன்றாக்கி பெரியவர்கள் பழ மொழியாகச் சொல்லி இருப்பார்கள்.இதையும் கதைக்கு ரொம்ப முக்கிய அம்சமாக எடுத்துக்கலாம். கல்யாண வீடு சீரியலில் மக்களுக்கு நான் இன்னும் சொல்ல வேண்டியது அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். சீரியலைப் பார்க்க பார்க்க உங்களுக்கே தெரியும் என்று கூறுகிறார்.
ரவுடி சிஸ்டர்ஸ்
கோபியின் மூத்த தங்கை அனுசூயா, ரம்யா, சவீதா மூணு பேரும் சும்மா கில்லிகள். அநியாயத்தைக் கண்டு வெகுண்டு எழுவதில் செம கில்லாடிகள். ஒரு நாள் திருடன்கள் ரெண்டு பேரை போட்டு துவைத்து எடுத்ததில் பயந்து ஓடினவர்கள்தான். இதோ இப்போது ராஜா, செல்வத்தின் மூலம் ரோஜாவை கடத்த வேண்டும், சூர்யாவை கல்யாணம் செய்துக்க தடையாக இருக்கும் கோபியின் தங்கைகளை கடத்த்த வேண்டும் என்று சொல்கிறான். செல்வம் மேலும் இரண்டு ஆட்களை வரவழைக்க...அவர்கள் மரத்தடியில் கோபியின் தங்கைகள் நின்று இருப்பதை பார்த்து விடுகிறார்கள்.அவர்களும் தங்களுடன் வருகிறார்கள் என்றதும் தெறிச்சு ஓடுகிறார்கள் ரெண்டு ரவுடிகளும்.
கோபி தங்கைகளா கொக்கா?