வெறும் காதலில் சுறுக்காதீர்கள்.. போ.. உலகம் உன்னுடையது.. நீயா நானாவில் கோபிநாத் சொன்ன வார்த்தை!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'நீயா நானா'. பல நேரத்தில் இந்த நிகழ்ச்சி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மீண்டும் நீயா நானா ஒருமுறை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வரும் கோபிநாத் முன்னிலையில் கடந்த வாரம் "காதல் தோல்வியில் தவிக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களை மீட்க முயலும் பெற்றோர்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாமினி என்ற இளம் பெண் தனது காதல் அனுபவத்தை கண்ணீர் மல்க பகிர்ந்தது அனைவரையும் உருக்கத்தில் ஆழ்த்தியது. நான்கு ஆண்டுகள் உண்மையாக காதலித்ததாக கூறிய அவர், காலப்போக்கில் தானே மிகவும் டாக்ஸிக்காக மாறிவிட்டதாக நேர்மையாக ஒப்புக்கொண்டார். காதலரிடம் அடிக்கடி அழைப்பது, அவரின் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் தொடர்பு கொண்டு அவரை பேச சொல்லிக் கெஞ்சுவது, அவர் செல்லும் இடங்களுக்கு பின்தொடர்ந்து செல்வது போன்ற செயல்களை தொடர்ந்து செய்ததாக கூறினார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: "இது அவருக்கு மிகவும் வலிக்கிறது என்று அவர் பலமுறை சொல்லியும், நான் அதை நிறுத்தவில்லை" என்று கூறிய யாமினி, கடந்த 9 மாதங்களாக இதே நிலையில் தான் நான் இருக்கிறன். காதலர் முற்றிலும் விலகி விட்ட போதிலும், இன்னும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையும், "ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் மாறிவிடுவேன்" என்ற நம்பிக்கையும் தன்னுள் இருந்து கொண்டே இருப்பதாக அவர் பகிர்ந்தார். யாமினியின் இந்த உருக்கமான பகிர்வு நிகழ்ச்சியில் இருந்தவர்களை மட்டுமல்லாமல், சமூக வலைதள பயனர்களையும் ஆழமாக பாதித்துள்ளது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, இது காதல் அல்ல உணர்ச்சி சார்ந்த பற்றுதல் எனும் கருத்துகளையும் முன்வைத்தனர்.
உலகம் உன்னுடையது: இந்நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் வழங்கிய அறிவுரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "உலகத்தில் கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை வெறும் காதலில் மட்டும் சுருக்காதீர்கள். போ.. உலகம் உன்னுடையது, என்று அவரது சொன்ன வார்த்தை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி காதல், பற்றுதல் மற்றும் தனி மனிதரின் உணர்ச்சி சமநிலையை பற்றிய பெரிய விவாதத்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications