twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதற்கு லீவு தரணும்?..’நீயா நானா’-ல் இல்லத்தரசிகள் பதிலைக்கேட்டு திகைத்த கோபிநாத்

    |

    விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் இல்லத்தரசிகள் அளித்த பிற்போக்குத்தனமான பதிலைக்கேட்டு நெறியாளர் கோபிநாத் அதிர்ச்சி யடைந்தார்.

    படித்து என்னதான் அறிவை பெற்றாலும், மாடர்ன் வாழ்க்கை வாழ்ந்தாலும் நமக்குள் புதைந்து கிடக்கும் நிலப்பிரபுத்துவ சிந்தனை மாறுவதில்லை என்பதை நீயா நானா நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற பெண்கள் சிலர் வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் இல்லத்தரசிகள் பேசிய பேச்சுகள் இன்னும் அவர்கள் 18-வது நூற்றாண்டிலேயே இருப்பதை காண்பித்ததை நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத் வருத்தப்பட்டு பல இடங்களில் பதிவு செய்தார்.

    விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு.. விஜய் யாரை கைக்காட்டியிருக்காரு தெரியுமா.. சாந்தனு நெகிழ்ச்சி! விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு.. விஜய் யாரை கைக்காட்டியிருக்காரு தெரியுமா.. சாந்தனு நெகிழ்ச்சி!

     சமூக அக்கறையுள்ள டிவி நிகழ்ச்சிகள்

    சமூக அக்கறையுள்ள டிவி நிகழ்ச்சிகள்

    தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பலநேரம் ஒன்றுக்கும் உதவாததாகவும், நம் நேரத்தை வீணடிப்பதாகவும் அமைந்திருந்தாலும் சில நிகழ்ச்சிகள் நம் மனதை தொட்டு வருடுகின்றன. சில நிகழ்ச்சிகள் மக்களின் சமூக அக்கறையை, வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன் நடத்தும் தமிழா தமிழா நிகழ்ச்சியும் விஜய் தொலைக்காட்சியில் நெறியாளர் கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியும் எப்போதும் மக்கள் பிரச்சனைகளை பேசி வருகின்றன.

    நிகழ்ச்சிகளில் அதிர்ச்சியூட்டும் பொதுமக்கள்

    நிகழ்ச்சிகளில் அதிர்ச்சியூட்டும் பொதுமக்கள்

    இதில் அவ்வப்போது பேசப்படும் நிகழ்வுகள், அதில் கலந்து கொள்பவர்கள் பேசும் கருத்துக்கள் நம்மை திடுக்கிட வைக்கும், உருக வைக்கும், பாராட்ட வைக்கும். உளவியல் ரீதியாக உள்ள பல விஷயங்களும் இந்நிகழ்ச்சியில் வெளிப்படும் அதை பார்க்கும் நாம் சக மனிதர்களின், சமூகத்தின் மன ஓட்டத்தை அழகாக புரிந்துக்கொள்ள அது உதவுகிறது. சில நேரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கூறும் காரணங்களை பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது.

     உணவு பழக்கம், கற்பித்தல் பற்றி அடிப்படை புரிதல் இல்லா மாடர்ன் பெற்றோர்

    உணவு பழக்கம், கற்பித்தல் பற்றி அடிப்படை புரிதல் இல்லா மாடர்ன் பெற்றோர்

    அதில் குழந்தைகள் கல்விக்காக எவ்வாறெல்லாம் நெருக்கப்படுகிறார்கள், அக்கறை என்கிற பெயரில் எவ்வாறெல்லாம் பெற்றோரால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை குழந்தைகள் அழகாக சொன்னார்கள். குழந்தைகளின் உணவு பழக்கங்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பெற்றோர் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் இருப்பதும், மாடர்ன் பெற்றோர்கள் பாஸ்ட்ஃபுட், ஜங்க் ஃபுட் வகைகளை குழந்தைகளுக்கு திணிப்பதையும் உணவு நிபுணர் வெளிப்படையாக சுட்டிக்காட்டி திருத்தச் சொல்லி குறிப்பிட்டார். இது போன்ற நிகழ்ச்சிகள் பட்டம் பெறுவதோ, ஆங்கிலம் பேசுவதாலோ அறிவு வளர்ந்துவிடாது அடிப்படை விஷயங்கள் குறித்த புரிதல் வேண்டும் என்பதை உணர்த்தியது.

     வீட்டு வேலை செய்யும் பெண்களும்-இல்லத்தரசிகளும் நிகழ்ச்சி

    வீட்டு வேலை செய்யும் பெண்களும்-இல்லத்தரசிகளும் நிகழ்ச்சி

    இது போன்ற ஒரு நிகழ்ச்சி நேற்று விஜய் தொலைக்காட்சி நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய டாபிக் 'வீட்டு வேலை செய்யும் பெண்களும் இல்லத்தரசிகளும்' என்பதே. இதில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் ஒருபுறமும் வீட்டு வேலைக்கு ஆள் வைத்து வேலை வாங்கும் இல்லத்தரசிகள் ஒரு புறமும் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய வாதமாக அமைந்தது வீட்டு வேலை செய்யும் பெண்களின் அடிப்படை உரிமைகளை இல்லத்தரசிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே. இந்த நிகழ்ச்சியில் பேசிய சில இல்லத்தரசிகள் பேச்சு மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருந்தது. இவர்கள் என்னதான் படித்து பெரிய வேலையில் வசதியுடன் வாழ்ந்து பல்வேறு மாடர்ன் திங்கிங் பற்றி பேசினாலும் இவர்களுக்குள் இன்னும் நிலப்பிரபுத்துவ சிந்தனையே உள்ளது என்பதை அவர்கள் பேச்சு எடுத்துக் காட்டியது.

     சாதாரண வீக்-ஆஃப் கூட கிடையாது..30 நாளும் வேலை

    சாதாரண வீக்-ஆஃப் கூட கிடையாது..30 நாளும் வேலை

    வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் பேசும்பொழுது எங்களுக்கு அடிப்படைத் தேவை வாரம் ஒரு நாள் லீவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், அதை மறுத்து பேசிய ஆசிரியையாக பணியாற்றும ஒரு இல்லத்தரசியின் "எதற்கு லீவு தர வேண்டும் இவர்களுக்கு லீவு தந்தால் வீட்டு வேலையை யார் பார்ப்பது, சாவு போன்ற காரியங்களுக்கு சென்றால் நாங்கள் மறுக்கவில்லை ஆனால் தேவையில்லாமல் எதற்கு லீவு போட வேண்டும்" என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அவரிடம் நெறியாளர் கோபிநாத் உலகில் விடுப்பே கொடுக்காமல் வேலை செய்யும் துறை ஏதாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார் அந்த பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அந்த இல்லத்தரசி சளைக்காமல் "நாங்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் வீட்டில் ஓய்வாக இருப்போம் எல்லோரும் வீட்டில் இருப்பார்கள் அன்று வீட்டுவேலைக்கு வராமல் லீவு போட்டால் என் வீட்டு வேலையை யார் பார்ப்பது"என்று கோபமாக கேட்டார்.

     அடிமைகள் போல நினைக்கும் மனோபாவம்

    அடிமைகள் போல நினைக்கும் மனோபாவம்

    "உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது அன்று நாங்களும் எங்கள் பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கணும் என்று தோன்றாதா? " என பணிப்பெண்கள் பக்கமிருந்து கேள்வி வந்தது. 30 நாளும் வேலை செய்ய ஒப்புக்கொண்டுத்தானே வருகிறீர்கள் அப்புறம் என்ன லீவு என்று விடாமல் கேட்டார் இல்லத்தரசி ஒருவர். இன்னொரு இல்லத்தரசி பெண் பேசும் பொழுது இவர்கள் எங்களையே கேள்வி கேட்கிறார்கள் இவர்கள் கேட்பதை பார்த்தால் இவர்கள் ஏதோ மாஸ்டர்கள் போலவும் நாங்கள் ஏதோ அடிமைகள் போலவும் நினைக்கிறார்கள் என்று கூறினார். அதற்கு நெறியாளர் கோபிநாத் அப்படியானால் அவர்கள் அடிமைகள் நீங்கள் மாஸ்டர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று திருப்பி கேட்டார்.

     ஒரு நாள் லீவு கிடைத்தால் மகன் கேட்டதை செய்து கொடுப்பேன் பணிப்பெண்ணின் ஏக்கம்

    ஒரு நாள் லீவு கிடைத்தால் மகன் கேட்டதை செய்து கொடுப்பேன் பணிப்பெண்ணின் ஏக்கம்

    இன்னும் சில பணிப்பெண்கள் பேசியது அவர்கள் பணி செய்யும் இடங்களில் சந்திக்கும் இடையூறுகள், அவமானங்களை சொல்வதாக இருந்தது. ஒரு பணிப்பெண் பேசும் பொழுது நான் சிங்கிள் மதர், எனக்கு என் மகனைத்தவிர யாரும் இல்லை. வாரத்தில் அனைத்து நாட்களும் நான் வீட்டு வேலை செய்கிறேன் என்னுடைய மகனுக்கு ஆசையாக சாப்பாடு பொங்கி தரக்கூட ஒரு நாள் ஒதுக்க முடியவில்லை. எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தால் நான் நிம்மதியாக உறங்குவேன்" என்று அழுதபடியே சொன்னார். இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது வீட்டு வேலை செய்யும் பெண்கள் அவர்கள் சந்திக்கும் பணி சுமையை தாண்டி அடையும் அவமானங்கள் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. இதை இல்லத்தரசிகள் யாரும் மறுக்காதது தான் இதில் உச்சகட்ட சோகம்.

     நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மகராசி இல்லத்தரசிகள்

    நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மகராசி இல்லத்தரசிகள்

    மற்றொரு பக்கம் கோபிநாத் பணிப்பெண்களிடம் உங்களுக்கு பிடித்த முதலாளி அம்மாவை அந்த மகராசியை சந்தித்ததே இல்லையா என்று கேட்டார். அப்பொழுது சில பெண்கள் சில முதலாளி அம்மாக்கள் இல்லத்தரசிகள் பற்றி கூறினார்கள். தன் மகளை பள்ளியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை படிக்கவைத்து இன்று அவள் ஆசிரியராக இருப்பதற்கு தன் வேலை செய்யும் வீட்டு முதலாளி அம்மாள் தான் காரணம் என்று ஒரு பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இன்னும் சில பெண்களும் இதே போல் உதாரணங்களை சொன்னார்கள். சிலர் மனிதாபிமானத்துடன் அவர்களும் மனிதர்கள் தானே என பணிப்பெண்களை நடத்தினாலும் மெஜாரிட்டியாக அதிகார மனப்பான்மையுடன் இல்லத்தரசிகள் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.

     படித்தவர்களிடம் பண்பில்லையே- வருத்தப்பட்ட கோபிநாத்

    படித்தவர்களிடம் பண்பில்லையே- வருத்தப்பட்ட கோபிநாத்

    இதில் பலர் படித்தவர்களாக, பெரிய இடங்களில் பழகி பல விஷயங்களை அறிந்தவர்களாக, அதிகம் சிந்திப்பவர்களாக, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருப்பதை பார்த்தபோது படிப்பிற்கும், அடிப்படை நல்ல பண்பிற்கும் சம்பந்தமில்லை என்பதை தான் இந்த நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது. இது போன்று நடக்கும் இல்லத்தரசிகள் மனப்பான்மை மாற வேண்டும் என்பதை தான் நான் கோரிக்கையாக வைக்கிறேன் என்று கோபிநாத் நிகழ்ச்சியை முடித்தார். படிப்பு பண்பாட்டை வளர்ப்பதற்கு ஆனால் ஏனோ அது இங்கு இல்லை.

     பணி பாதுகாப்பு, நலவாரியம், பாலியல் சீண்டல் பற்றி நிகழ்ச்சி பேசாதது வருத்தமே

    பணி பாதுகாப்பு, நலவாரியம், பாலியல் சீண்டல் பற்றி நிகழ்ச்சி பேசாதது வருத்தமே

    அதேப்போன்று வீட்டு வேலை செய்பவர்களுக்கு நடக்கும் தனித்தட்டு, கிளாஸ் போன்ற அவமானங்கள், பாலியல் சீண்டல்கள், பணி பாதுகாப்பு, அரசே சம்பளத்தை நிர்ணயிப்பது, நலவாரியம் போன்ற எட்டாத பல விஷயங்களை பற்றி இந்த நிகழ்ச்சி பேசாவிட்டாலும் ஓரளவிற்கு வீட்டு வேலை செய்யும் பெண்களின் மனநிலையை, அவர்கள் அடையும் அவமானங்களை, அவர்கள் வாழ்க்கை பிரச்சினைகளை நிகழ்ச்சியில் நெறியாளர் கோபிநாத் சரியாக அணுகியது பாராட்டத்தக்க ஒன்று. இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து பொதுமக்களும் பார்த்து அந்த நிகழ்ச்சிக்கு வளு சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

    (படம் உதவி விஜய் டிவி)

    English summary
    Host Gopinath was shocked to hear the reactionary response of the housewives on Vijay TV's Neeya Nana. Some of the women who participated in the Neeya Nana program revealed that no matter how much knowledge we get, no matter how much we study and live a modern life, the feudal mentality buried in us does not change.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X