For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காந்த கண்ணழகி இந்தா இங்கே பூசு... ஆஹா.. கவுண்டரைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு!

  |

  சென்னை: சன் டிவியில் தினமும் திங்கள் முதல் சனி வரை மதியம் 3:30 மணிக்கு திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று வியாழன் பிற்பகல் சூரியன் படம் ஒளிபரப்பினார்கள். பார்த்தால்.. நம்ம கவுண்டர் வந்து சரவெடியாக கலக்கி விட்டார்.

  அதில் நடிகர் கவுண்டமணி பூ மிதிக்கிறேன்னு ஆசையா கிளம்பி வந்து, சந்தனம் பூசிவிடும் பெண்ணிடம்.. காந்த கண்ணழகி பின்னால பூசு.. ரைட்ல பூசு.. தி லெஃப்ட் என்று கைடு பண்ணுவார். இந்த காமெடிக்கு அப்போதே தியேட்டரில் மக்கள் ஆர்ப்பரித்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

  அது இன்றுவரை தொடருதுங்க...சிவகார்த்திகேயன் படமான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் காந்தக கண்ணழகி லுக்குவிட்டு கிக்கு ஏத்தும் முத்துப் பல்லழகி என்கிற பாடலின் முன் வரியே கவுண்டமணியின் டயலாக்கை சொல்லித்தான் ஆரம்பிக்கும். யூத் இன்னும் கவுண்டமணியின் ஜோக்கை பார்த்துட்டுத்தான் தூங்கப் போறாங்க.

  நாராயணா இந்த கொசுத் தொல்லை

  நாராயணா இந்த கொசுத் தொல்லை

  நான் ரொம்ப பிஸி என்கிற டயலாக்கை இந்த படத்தில்தான் கவுண்டமணி அதிகம் பேசி இருப்பர். கட்சியின் தலைவர் என்கிற போர்வையில் பல காமெடிகளை செய்துகொண்டே இருப்பார். நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைப்பா.. அவனை மருந்தடிச்சு கொல்லுன்னு கூட இந்த படத்தில்தான் ஓமக்குச்சி நாராயணனைப் பார்த்து சொல்லுவார். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்கிற வசனம் கூட இந்த படத்தில்தான் கவுண்டமணி பேசுவார்.

  என்னடா இது.. ஜவ்வா இழுத்துட்டு.. மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவு... தட்றோம்... தூக்கறோம்!என்னடா இது.. ஜவ்வா இழுத்துட்டு.. மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவு... தட்றோம்... தூக்கறோம்!

  எங்கே பூஸ்?

  எங்கே பூஸ்?

  பூ மிதிக்க வாங்கன்னு கூப்பிட்ட உடனே.. நான் ரொம்ப பிஸின்னு சொல்லி பின்னர் ஒப்புக்கொண்டு ஜாலியா பூ மிதிக்க வரும் கவுண்டமணி எங்கே பூஸ்..எங்கே பூஸ்னு கேட்டுகிட்டே வருவார். அங்கே சந்தனம் பூசிவிடும் பெண்களை பார்த்து இந்தா இங்கே பூசு.. காந்தக் கண்ணழகி உனக்கு நான் மினிஸ்ட்டிரியில் இடம் வாங்கித் தாரேன்..இந்த பின்னால பூசு.. ரைட்ல பூசு..தி லெஃப்ட் என்று கைட் பண்ணுவார். கடைசியில் பூ மிதிக்க என்று நெருப்பைப் பார்த்ததும் அலறிக்கிட்டே ஓட நினைப்பார்.இப்படி காமெடி சூப்பரா இருக்கும்.

  விஜி பிரபுதேவா

  விஜி பிரபுதேவா

  நடிகை விஜி, கோழி கூவுது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர். கங்கை அமரன் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார். இயற்கையாகவே நீண்ட தலைமுடி இருந்தது. அதை படங்களுக்காக என்று சின்னதாக கட் செய்துக்கொண்டு படங்களில் நடித்தார் விஜி. சூரியன் படத்தில் லாலாக்கு டோல் டப்பிம்மா என்கிற பாடலுக்கு அப்போது டான்சராக மட்டும் இருந்த பிரபு தேவாவுடன் சேர்ந்து நடனமாடி இருந்தார். அதற்குப் பிறகான நான்கைந்து வருடங்களில் விஜி தற்கொலை செய்துக்கொண்டார்.

  நடிகை ரோஜா

  நடிகை ரோஜா

  நடிகை ரோஜா செம்பருத்தி படத்தின் மூலம் அப்போதுதான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி இருந்தார். அறிமுகம் ஆன புதிதிலேயே ரஜினிகாந்துடன் உழைப்பாளி, வீரா என்று வெற்றி படங்களில் நடித்தவர். சூரியன் படத்தில் அன்று மலர்ந்த மலர் போல மிகவும் ஃ பிரஷாக இருப்பார் ரோஜா. சரத்குமார் அப்போதுதான் ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்த நேரம். சூரியன் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

  பதினெட்டு வயது

  பதினெட்டு வயது

  இசை அமைப்பாளர் தேவாவின் இசை கொடி மேலே மேலே என்று பறக்கத் துவங்கியதும் இந்த காலக்கட்டம்தான். இந்த படத்தில் கந்த சஷ்டி கவசம் மெட்டில் பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய்போட பாடலை தேவா இசை அமைத்து இருப்பார். படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.

  English summary
  After a big gap Sun TV telecasted Suryan movie in which the legendary Goundamani acted in a superb role.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X