அப்போ அது பொய்யா? பிக் பாஸ் வீட்டுக்கு முன் நிற்கும் ஜிபி முத்து.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியான நிலையில், திடீரென பிக் பாஸ் வீட்டுக்கு முன் ஜிபி முத்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss Tamil season 5 Launch Date Revealed | Kamal Hassan

வரும் அக்டோபர் மாதம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என தெரிகிறது.

ஜிபி முத்துவின் பெயர் போட்ட ட்விட்டர் ஐடியிலும் இதே தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

100 நாட்கள்

100 நாட்கள்

பிக் பாஸ் வீட்டில் 16 பிரபலங்கள் உள்ளே சென்று பல கேமராக்கள் முன்பு 100 நாட்கள் வெற்றிகரமாக வாழ்ந்து விட்டு வெளியே வந்தால் பிக் பாஸ் டைட்டில் உடன் 50 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கும். இதுவரை வெற்றிகரமாக தமிழில் 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 5வது சீசன் அடுத்த மாதம் அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

டைட்டில் வின்னர்கள்

டைட்டில் வின்னர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனில் நடிகர் ஆரவ், இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் மற்றும் நான்காவது சீசனில் நடிகர் ஆரி உள்ளிட்டோர் பிக் பாஸ் வின்னர் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளனர்.

விரைவில் ஆரம்பம்

விரைவில் ஆரம்பம்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையுடன் பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்த நிலையில், வழக்கம் போல ஜூலை மாதத்திலேயே பிக் பாஸ் சீசன் 5 தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப் போயுள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 லோகோவை நடிகர் கமல்ஹாசன் வீடியோவில் தோன்றி வெளியிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து

இந்த சீசனில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து பங்கேற்பார் என முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் பங்கேற்கவில்லை என தகவல்கள் பரவின. இந்நிலையில், மீண்டும் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பதை உறுதி செய்யும் விதமாக பிக் பாஸ் இல்லத்திற்கு முன் நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆரம்பிக்கலாமா

ஆரம்பிக்கலாமா

மேலும், ஜிபி முத்துவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் என்கிற அறிவிப்புடன் உள்ள ட்விட்டர் பக்கத்தில், "ஆரம்பிக்கலாமா? நண்பர்களே நான் கூடிய விரைவில் #BiggBossTamil5 இல்லத்துக்கு வருகிறேன்" என ட்வீட் போட்டுள்ளார். நடிகை பூனம் பஜ்வா உள்ளிட்ட பிரபலங்களும் அதை லைக் செய்துள்ளனர்.

மதன் கவுரி கேள்வி

மதன் கவுரி கேள்வி

அதே புகைப்படத்தை பதிவிட்டு பிரபல யூடியூபர் மதன் கெளரி பிக் பாஸ் சீசன் 5ல் ஜிபி முத்து கலந்து கொள்கிறாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுவரை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக எந்தவொரு போட்டியாளரும் அதிகாரப்பூர்வமாக இப்படி அறிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X